தலைவர் கேட்டால் அமைச்சர்
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்திக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அகில இந்திய பா.ஜ.க. தலைவராக இருந்த குஷாபாவ் தாக்கரேக்கு அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த துணைத் தலைவருமானஜனா.கிருஷ்ணமூர்த்தியை தலைவர் ஆக்குவது என்றுதான் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அரசியல் சூழ்நிலை, பலரை திருப்திப்படுத்துகின்ற எண்ணத்தில்தான் பா.ஜ.க. தலைவர் பதவி, ஜனா.கிருஷ்ணமூர்த்திக்கு கிடைக்காமல், பங்காரு லட்சுமணன்தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தமிழக பா.ஜ.க.வினருக்கு ஏக வருத்தம்.
ஜனா.கிருஷ்ணமூர்த்தியும் சற்று வருத்தத்திலேயே இருந்தார். இந்த நிலையில், சனிக்கிழயைன்று டெல்லியில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர்வாஜ்பாய், பங்காரு லடசுமணன், அத்வானி, குஷாபாவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் செயல்பாடுகள்,புதிய நிர்வாகிகள், அமைச்சரவை விஸ்தரிப்பு பற்றி பேசினார்கள். அந்த கூட்டத்தில் ஜனா. கிருஷ்ணமூர்த்தியை அமைச்சராக்கிவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டதாவும், ரங்கராஜன் குமாரமங்கலம் இடத்தில் ( திருச்சி தொகுதியில்) போட்டியிட வைத்து ஜனாவை மத்தியஅமைச்சராக்கி விடலாம் என்றும் முடிவு செய்திருக்கிறார்களாம் தலைவர்கள்.
ஜனா.கிருஷ்ணமூர்த்தி மூத்த தலைவர். ஜனாவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பா.ஜ.க. தலைவர் பதவி கிடைக்கவில்லை. அதைசரிகட்ட அமைச்சர் பதவி தருகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications