ஸ்பிக் ஊழல்: ஜெயலலிதா, முத்தையாவுக்கு குற்றப்பத்திரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிட்கோ பங்குகளை ஸ்பிக் நிறுவனத்துக்கு விற்றது தொடர்பான ஊழல் வழக்கில்முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிடம்குற்றப்பத்திரிக்கை நகல் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஜெயலலிதா தவிர இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்பிக் நிறுவனத் தலைவர்ஏ.சி. முத்தையா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமச்சந்திரன் ஆகியோருக்கும்குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அரசுக்குச் சொந்தமான டிட்கோ நிறுவனத்தின்பங்குகள் ஸ்பிக் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன.

இப் பங்குகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு பல கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தார்.

இவ் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலம், அரசுக்கு இழப்புஏற்படுத்தியதற்காக ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவன உரிமையாளர் ஏ.சி. முத்தையாஆகியோர் ரூ. 28.29 கோடியைச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த பங்குப் பத்திர மோசடி குறித்து தனியாக விசாரணை நடத்தி வழக்குத்தொடரும்படியும் சிபிஐக்கு அவர் உத்தரவிட்டார்.

இத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். இம் மேல் முறையீட்டுமனுவை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

நீதிபதி வெங்கடாசலம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்த டிவிஷன்பெஞ்ச், சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற உத்தரவிட்டது.இது தொடர்பானவழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில், இவ் வழக்கை விரைந்து நடத்துமாறு கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில்ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, இவ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையைநடத்தும்படி சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த18-ம் தேதி முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராமச்சந்திரன், ஸ்பிக் நிறுவன அதிபர் ஏ.சி. முத்தையா ஆகியோர் செப்டம்பர்4-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஜெயலலிதா, ஏ.சி. முத்தையா, ராமச்சந்திரன் மூன்று பேரும் திங்கள்கிழமை(செப்டம்பர் 4-ம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்குகுற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.

குற்றப்பத்திரிக்கை 1000 பக்கங்களைக் கொண்டுள்ளதால் அவற்றைப் படித்துப்பார்க்க கால அவகாசம் வேண்டும். ஆகவே இவ் வழக்கை ஒரு மாதத்துக்குஒத்திவைக்கவேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதிகேட்டுக் கொண்டார்.

இதையடுத்து இவ் வழக்கு விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+