உலகம் முழுவதும் தினமும் 1000 நிலநடுக்கங்கள்...!?
மும்பை:
உலகம் முழுவதும் தினசரி 1000 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்று நிலநடுக்கப்பதிவு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
பூமிக்குக் கீழே நீர்ம நிலையில் உள்ள பாறைக் குழம்பின் அசைவுக்கு ஏற்பட பூமியின்மேற்பரப்பு நகருவதால் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
நிலநடுக்கத்தின் அளவு எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை. லேசானது முதல்பெரிய நிலநடுக்கம் வரை ஏற்படுகிறது.
இந்தியாவில் தக்காணப் பீடபூமிப் பகுதியில்தான் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொய்னா அணைப் பகுதிமற்றும் கோவாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிச்டெர் அளவு கோளில் இதன் பாதிப்பு 5.2 என்று பதிவானது. இந்த நிலநடுக்கத்தால்பெருத்த பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு இன்னும்கணக்கிடப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நான்கு முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 6.02-க்கு முதல்நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.08, 6.13, 9.17 மணிக்கும் நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று அப் பகுதிமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பலர் தங்களது இருப்பிடங்களை விட்டு வேறுபகுதிகளுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர்.
கொய்னா அணைப் பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகும். இதுவரைஅங்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 639 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முதன்முதலாக ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு ரிச்டெர் அளவுகோளில் 6.5 என்றுபதிவானது. அதன் பிறகு லேசானதும், மிதமானதும், பெரியதுமான நிலநடுக்கங்கள்ஏற்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மகாராஷ்டிர மாநில லாத்தூர்மற்றும் ஒஸ்மானாபாத்தில் 1993-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம்தான் பெரியது.
ரிச்டெர் அளவு கோலில 6.4 என்று பதிவான அந்த நிலநடுக்கத்தால் 15 ஆயிரம் பேர்இறந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications