284 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
டெல்லி:
ஆசிரியர் பணியில் சிறப்பாகச் சேவையாற்றியதற்காக 284 பேருக்கு நல்லாசிரியர்விருது வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த தினமானசெப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறப்பாகச் சேவையாற்றியவர்களுக்கு நல்லாசிரியர்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இந்தியா முழுவதும் இருந்து 284 பேர் தேர்வு செய்யப்பட்டுஅவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில்விருதுகளை குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் வழங்கினார்.
விருது பெற்றவர்களில் 74 பேர் பெண்கள். இது தவிர சம்ஸ்கிருதப் பள்ளியைச் சேர்ந்த7 ஆசிரியர்கள், அராபி மற்றும் பெர்சிய பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆசிரியர்களும் இதில்அடங்குவர்.
பாராட்டுப் பத்திரம், வெள்ளிப் பதக்கம், ரூ. 25 ஆயிரம் பணமுடிப்பு கொண்டது இந்தநல்லாசிரியர் விருது.
விருது வழங்கு விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி பேசினார்.
1958-59-ம் ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. தொடக்கக் கல்வி, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்தஆசிரியர்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு இந்த விருதுவழங்கப்படுகிறது.
மாணவர்களுக்குக் கல்வி புகட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களுக்குஇத்தகைய விருது வழங்குவதன் மூலம் நாடு தனது மரியாதையைச் செலுத்துகிறதுஎன்றார் முரளி மனோகர் ஜோஷி.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications