கள்ளக் காதலியைக் கொளுத்தியவருக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கள்ளக் காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூரைச் சேர்ந்தவர் பரமசிவம்(36). இதே ஊரைச் சேர்ந்தவர் ராணி (29).

இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். பரமசிவத்திற்குகுடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை ராணி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும்சண்டை ஏற்பட்டுள்ளது.

கடந்த 98ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இரவு 10.30 மணிக்கு இருவருக்கும்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறையடுத்து, பரமசிவம் ராணியின் மீதுமண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயமடைந்த ராணி, கோவைஅரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்வழக்குப் பதிவு செய்து பரமசிவத்தைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு கோவை மாவட்ட தன்மை நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,பரமசிவத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+