இத்தனை வகை மாமியார்களா?
சென்னை:
சென்னையில் சிறந்த மாமியார்களைத் தேர்ந்தெடுக்கும் சூப்பர் மாமியார் போட்டி புதன்கிழமை நடந்தது.
சென்னை அசோக்நகர் முன்னேறிய பெண்கள் சங்கத்தின் சார்பில் ராணி சீதை அரங்கத்தில் சூப்பர் மாமியார் 2000என்ற போட்டி நடந்தது. இந்தப் போட்டிக்காக வண்ணப் பட்டுச் சேலைகளில் வந்திருந்த மாமியார்கள் மேடையில்தோன்றினார்கள்.
இந்த மாமியார்களுக்காக, நாடகம், பாட்டுடன் கூடிய நாடகம், வராத தட்சணை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைமேடையில் தோன்றி நடத்திக் காட்டினார்கள். சூப்பர் மாமியார் -2000 ஐத் தேர்ந்தெடுப்பதற்காக நடிகை சச்சு,எழுத்தாளர் உஷா சுப்ரமணியன், ரேணுகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் போட்டியில் கலந்து கொண்ட மாமியார்களிடம் குடும்பப் பிரச்சனைகள் குறித்து சிக்கலானகேள்விகளைக் கேட்டனர். பல போட்டிகளில் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்களை எடுத்த மேற்கு மாம்பலம்பகுதியைச் சேர்ந்த கவுசல்யா பால்பாண்டியன் சூப்பர் மாமியார் 2000 பட்டத்தை வென்றார்.
மருமகள் மெச்சிய மாமியார் பட்டத்தை இந்திரா சுப்ரமணியம் என்பவர் பெற்றார். சமையல் போட்டி, தையல்போட்டி, உடல் ஆரோக்கியத்துக்கான போட்டி, பாட்டி வைத்தியம் குறித்த போட்டி என்று பல பிரிவுகளில்போட்டி நடத்தப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பெண்கள் சங்கத் தலைவி பூர்ணிமா குமார், செயலாளர்கள் அலமேலு,ராமகிருஷ்ணன், பொருளாளர் ரெமா பணிக்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications