இந்தியா முழுவதும் தொலைத் தொடர்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது
டெல்லி:
இந்தியா முழுவதும் உள்ள 4,00,000 தொலைத் தொடர்பு ஊழியர்களின்காலவரையற்ற வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும்தொடர்ந்தது.
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையிலிருந்து, தொலைபேசி உள்ளிட்டதொலைத் தொடர்புத் துறையைப் பிரித்து பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்(பிஎஸ்என்எல்) என்ற தனி நிறுவனமாக மாற்றுவதை எதிர்த்து தொலைத்தொடர்புஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், வேலைநிறுத்தத்திலிருந்து பாரதீய தொலைதொடர்பு ஊழியர்கள்கூட்டமைப்பு (பி.டி.இ.எப்.) வேலை நிறுத்தத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளது. இதுநாங்கள் எதிர்பார்த்துதான் என தேசிய தொலைத் தொடர்பு ஊழியர்களின்கூட்டமைப்பு (என்.எப்.டி.இ.) தெரிவித்துள்ளது. ஆனாலும் மற்ற சங்கங்களின்ஆதரவுடன் எங்கள் வேலைநிறுத்தம் தொடரும் என அந்த சங்கம் தெரிவித்தது.
இதற்கிடையே, வேலை நிறுத்தம் நடத்தி வரும் மூன்று தொழிற்சங்கங்களும் அரசுடன்பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளன.
புதன்கிழமை மாலை வரை ஊழியர் சங்கத் தலைவர்கள் மூன்று பேரும்அலுவலகத்திலேயே தகவல் வரும் எனக் காத்திருந்தனர். ஆனால் தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்திலிருந்து எந்தவித தகவலும் வரவில்லை. இத்தனைக்கும்,அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் அலுவலகம் மேலேதான் இருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வேலை நிறுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன் பி.டி.இ.எப்.தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தலைவர் சர்மா கூறுகையில், பி.எஸ்.என்.எல்-க்குகொடுக்க உள்ள 80 பில்லியன் பணம் போதுமானது அல்ல. இதில் 1.5 பில்லியன்ரூபாய் புதிய நிறுவனத்தின் பொருட்களுக்கும், உரிமங்கள் பெறுவதற்கானபணத்திற்கும், காப்பீடு, விற்பனை வரி போன்றவற்றிற்கும் செலவிடப்படும்.
அரசு நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து நஷ்டங்களையும் தீர்ப்பதாக கூறியுள்ளது.அரசின் புதிய நடவடிக்கையால் நஷ்டம் மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளது.ஏனென்றால்இது மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக செயல்பட இருப்பதால் இதுலாபகரமாக செயல்பட முடியாது. எத்தனை நாட்கள் இது சாத்தியம் எனவும் கேள்விஎழுப்பினார். இத்தனை கேள்விகள் கேட்ட அவர் சில மணி நேரங்களிலேயேபோராத்திலிருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதற்கிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கு அமைச்சர்பாஸ்வான் அளித்துள்ள உறுதியில், பிஎஸ்என்எல் முழுவதும் அரசினுடையது.மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்.எஸ்.என்.எல்.) போல் தான் இதுவும்.எம்.எஸ்.என்.எல். டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் தொலைத் தொடர்புசேவையை மேற்கொண்டு வருகிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications