தமிழக மீனவர் கேரளாவில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
சம்பாதித்த பணத்தை திருடர்களிடம் பறிகொடுத்தததால் மதுரையைச் சேர்ந்த மீனவர் கேரள மாநிலம்கொச்சியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையைச் சேர்ந்த 40 வயது நபர் கொச்சியில் வசித்து வந்தார். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தஅவர் தினமும் மீன்பிடித்து, அதை விற்று வரும் பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சிரமப்பட்டு அவர் ரூ. 40 சம்பாதித்து வைத்திருந்தார். புதன்கிழமை திருடர்கள் சிலர்இவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
இதனால் மனமுடைந்த இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதில் இவரதுஇரு கால்களும், இரு கைகளையும் இழந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.












Click it and Unblock the Notifications