காஷ்மீர்: இந்தியாவை ஐ.நா.வற்புறுத்த வேண்டும் என்கிறார் முஷாரப்
நியூயார்க்:இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலுள்ள காஷ்மீர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.சபை மில்லினியம் வருடக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முஷாரப். அங்கு வியாழக்கிழமைசெய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா, பாகிஸ்தானிடையே 1948 ம் ஆண்டு முதல் காஷ்மீர் பிரச்சனை இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில்முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்தியா அணு ஆயுதங்களைக் கீழே போட்டு, எல்லையில் உள்ள ராணுவ வீரர்களை வாபஸ் பெற்றால் நாங்களும் அணு ஆயுதங்களைக் கீழே போடதயாராக இருக்கிறோம். தீவிரவாதத்தால் எந்தப் பயனும் இல்லை. காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பாகிஸ்தான் எந்த நிலைப்பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் போர்நிறுத்தம் அறிவித்திருந்தது. அதற்குப்பின் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.அதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற ஹிஸ்புல் கேட்டுக்கொண்டதைஇந்தியா ஏற்கவில்லை. இதனால் போர் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
ஐ.நா.சபையும், அமெரிக்க அதிபர் பில்கிளின்டனும் சேர்ந்து காஷ்மீர் பிரச்சனை குறித்து தீர்வு காண இந்தியாவைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.தெற்காசியாவில் அமைதியைக் குலைக்கும் வகையில் இருந்து வருவது காஷ்மீர் பிரச்சனைதான். இதற்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றார்முஷாரஃப்.
மேலும், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண தன்னால் இயன்ற அளவு உதவுவதாகத் தெரிவித்த வங்கதேச பிரதமருக்கும் நன்றி கூறினார் முஷாரப்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications