கருணாநிதி-கிருஷ்ணா பிரஸ் மீட்டில் மொழிப்பிரச்சனை
பெங்களூர்:
பெங்களூரில் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்ற நிருபர்கள் கூட்டத்தில் வீணாக மொழிப்பிரச்சனையைக் கிளப்ப முயற்சி நடந்தது.
இதை இரு முதல்வர்களும் சமயோஜிதமாக முறியடித்தனர்.
ராஜ்குமாரை மீட்பது குறித்தும், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும்வெள்ளிக்கிழமை பெங்களூரில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை முடிந்ததும் இருமாநில முதல்வர்களும் சேர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது நிருபர் ஒருவர் கன்னடத்தில் கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதல்வரும், அவரது அமைச்சரவைஉறுப்பினர்களும் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்குப் புரியும் வகையில் உங்கள் கேள்வியை ஆங்கிலத்தில் கேளுங்கள் என்றார்.
அப்போது குறிக்கிட்ட இன்னொரு நிருபர், சென்னையில் தமிழில்தான் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
பதிலளித்த முதல்வர் கிருஷ்ணா மொழிப்பிரச்சனையைக் கிளப்ப வேண்டாம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட, தமிழக முதல்வர் கருணாநிதி, நான் தமிழில் பேசுகிறேன். அதை தமிழக சட்ட அமைச்சர் ஆலடி அருணா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவார் என்று கூறி மொழிப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்கள் கூட்டம் நடந்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications