ஏப்ரலில் தமிழக சட்டசபைத் தேர்தல்
சென்னை:
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரும் 2001 ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இத் தகவலை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நிருபர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடாையள அட்டை வழங்கும் பணி தமிழ்நாட்டில் எப்படி நடக்கிறது என்பது பற்றிஆலோசிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை அகில இந்திய தேர்தல் கமிஷன் கூட்டியது.
சென்னையில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர்ஏ.பி.த்துசாமி, தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் ஏ.என். ஜா, தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா,நிதித்துறையின் சிறப்புச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களைச் சந்தித்த தேர்தல் கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்தி. தமிழ்நிாட்டில் சட்டசபையின் பதவிக் காலம்அடுத்த ஆண்டு மே மாதம் 21- ம் தேதி வரை இருக்கிறது. நாங்கள் அதற்கு முன்பாக அதாவது ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலைநடத்திவிடலாம் என்று இருக்கிறோம்.
எனவே, ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு உண்டு. முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில அரசுவிரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியுள்ளதால்முன்கூட்டியே தேர்தல் நடத்துவதில் பிரச்சனை உள்ளது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி மிகவும் மந்தமாகவே உள்ளது. இது 57 சதவீதத்தைமட்டுமே எட்டியுள்ளது. தேர்தலுக்குள் குறைந்தது 70 சதவீதம் மக்களுக்காவது புகைப்பட அடையாள அட்டைவழங்கப்பட வேண்டும். இதற்கு மாவட்டக் கலெக்டர்கள் உதவி புரிய வேண்டும்.
சமீபத்தில் திருச்சி தொகுதி எம்.பி.யும், மத்திய மின்சாரத்துறை அமைச்சருமான ரங்கராஜன் குமாரமங்கலம்மரணமடைந்ததால் அந்த நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அதை எப்போதுநடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் கிருஷ்ணமூர்த்தி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications