பாகிஸ்தானிய வீரர்களுக்கு நீதிமன்றம் சம்மன்?
கராச்சி:
நாங்கள் கிரிக்கெட் விளையாட தடை செய்து நீதிமன்றம் சம்மன் ஏதும் பிறப்பிக்கவில்லை என பாகிஸ்தானின் மூன்று முன்னணி கிரிக்கெட் வீரர்கள்மறுத்துள்ளனர்.
வகார் யூனுஸ், சயீத் அன்வர், முஸ்தாக் அகமத் ஆகியோரை பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கக் கோரி சிந்து மாகாண நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்த மூவரும் மறுத்தனர்.
மேட்ச் பிக்சிங்சில் தொட்ரபுள்ளதாகக் கூறப்படும் அனைத்து வீரர்களையும் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி காதிர் கான் நல டிரஸ்ட் என்றஅமைப்பு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம் இந்த 3 பேர் தவிர வாசிம் அக்ரம், இன்சமாமுல்-ஹக், சலீம் மாலிக், அதாவுர் ரகுமான், அக்ரம் ராசாஆகியோருக்கும் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வரும் 25 தேதி இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனஉத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சம்மன் ஏதும் வரவில்லை என வீரர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
