ராகிங்கால் மாணவி தற்கொலை: சீனியர் மாணவர்களுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
ராகிங் கொடுமைக்கு அப்பாவி மாணவ மாணவிகள் பலியாவதை நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்காது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி தீபா. காஞ்சிபுரம் கீழாம்பியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் பி.எஸ்.சி மைக்ரோ பயாலஜி பிரிவில் முதலாமாண்டுமாணவியாகச் சேர்ந்தார். அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிலரும் சேர்ந்து கொண்டு தீபாவை ராகிங் செய்தனர்.பாட்டுப்பாடு, நிர்வாணமாக நடனமாடு என்று வற்புறுத்தி கொடுமை செய்தனர்.
இந்த அவமானம் தாங்காமல் தீபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீபா, நீதிபதியிடம் கொடுத்த மரணவாக்குமூலத்தின் அடிப்படையில்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவி மோகனவல்லி, மாணவர்கள் சத்யமூர்த்தி, சசி ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூர்த்தி,சசிஆகிய இரு மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் தனது தீர்ப்பில் ராக்கிங் கொடுமைகள் பற்றி கடுமையாக தீர்ப்பு அளித்திருக்கிறார்.உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் வழங்கியுள்ள தீர்ப்பில், எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ச்சியாக காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரியில் முதலாவது ஆண்டு படிப்பில்சேர்ந்த மாணவி தீபாவுக்கு 04-08-2000 முதல் 10-08-2000 வரையிலான நாட்கள் விதியின் வலிமையால் துக்ககரமாண நாட்களாகமாறிவிட்டன.
ஏழு அல்லது எட்டு மாணவ மாணவிகள் சேர்ந்து தீபாவை கொடுமையும், கேலியும் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய தொந்தரவு தாங்க முடியாமல்அதில் இருந்து தப்பிக்க அவர் தனக்குத்தானே மண்ணெனைய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தீபாவின் மரண வாக்குமூலத்தில், மூத்த மாணவ மாணவிகள் தொடர்ந்து கேலி செய்து வருவதை தாங்க முடியாமலும், மேலும் கேலி செய்வதில் இருந்துதப்பவுமே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த செயல் மிகவும் கொடூரமானது தற்பொழுதைய காலகட்டத்தில் ஏதோ ஜாலிக்காக முதலில் கேலி செய்வதில் ஆரம்பித்து, பின்னர் அதுவேவிபரீதமாக மாறி விடுவதும் மாணவர்களிடையே வாடிக்கையாகிவிட்டது.
இது போன்ற கொடூரமான, ஈனத்தனமான குற்றங்கள் நடந்து ஏதும் அறியாத அப்பாவி மாணவ-மாணவிகள் பலியாவதை இந்த நீதிமன்றம்கண்களை மூடிக்கொண்டு மெளனமாக பார்த்துக் கொண்டிருக்காது. இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்க தக்கது.
எனவே குற்றத்தின் கொடூரத்தன்மையைக் கருத்தில் கொண்டு அப்பாவி, இளம் மாணவியின் சாவுக்குக் காரணமாக இருந்த மாணவர்களுக்கு ஜாமீன்வழங்க முடியாது. அவர்களின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி முருகேசன் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications