“ஹார்ட் பீட் 3”ல என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியலை திட்டி தீர்த்த இளைஞர்கள் கூட வெப்சீரிஸை ஒரு வாரம் முழுக்க காத்திருந்து சலிக்காமல் பார்த்து வருவார்கள். அதிலும் இளம் தலைமுறையினரை அதிகமாக பேச வைத்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த சீரிஸின் 3வது சீசன் வரும் 30ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவரும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே எப்பதான் ஹார்ட் பீட் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு வழியாக அடுத்த வாரம் வரப்போகுது என்று அப்டேட் கொடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் இதில் என்னதான் கதையாக இருக்கும்? ரீனா உயிர் பிழைப்பாரா? அப்படியே உயிர்பிழைத்தாலும் அப்பாவுடன் போவாரா? அல்லது தனியாக போய்விடுவாரா? மீண்டும் தன்னுடைய காதலனை மன்னித்து ஏற்றுக் கொள்வாளா? என்றெல்லாம் பல கேள்விகள் இருக்கிறது.

ஹார்ட் பீட் அப்டேட்

அதே நேரத்தில் தடையை மீறி ரீனாவுக்கு அவருடைய அப்பா ட்ரீட்மெண்ட் பார்த்திருப்பதால் அவருக்கு இனி என்ன ஆகும்? என்றெல்லாம் பலரும் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இப்போ விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை காயு ஸ்ரீ இந்த சீரிஸின் முக்கிய கேரக்டரில் என்ட்ரி கொடுக்கிறார் என்ற ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.

ஆனால் அவர் என்ன கேரக்டரில் வருகிறார் என்பதை படக்குழு இன்னும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அதனால் ரசிகர்கள் இவர் அந்த கேரக்டராக இருக்குமோ? அல்லது இந்த கேரக்டராக இருக்குமோ? என்று கதை எழுத தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே ரீனா வேற இனி நான் இந்த சீரிஸில் பழைய ரீனாவை மிஸ் பண்ணுவேன் என்பது போல ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதனால் ரீனா தான் விலகப் போகிறாரா? அவருக்கு பதில் தான் காயு வர போகிறாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Heart Beat Season 3 Gayu Shree Vijay TV Aha Kalyanam Disney Hotstar Web Series

ஹார்ட் பீட் 3 ரிலீஸ் தேதி

அதனாலேயே இந்த 30ம் தேதி எப்போ தான் வரும்? என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஓடிடியில் எத்தனையோ வெப்சீரிஸ் வந்தாலும் இந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ்க்கு மட்டும் இந்த அளவிற்கு கிரேஸ் இருப்பதற்கு முக்கிய காரணம் இது காதல் குடும்பங்களை தாண்டி ஒரு பெரிய ஹாஸ்பிடலில் நடக்கும் கதையை மையமாக இருக்கிறது. டாக்டர்கள், நர்ஸ், பேஷண்ட் என அவர்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக சொன்னதாலயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.

ஹார்ட் பீட் 3 நடிகர்கள்

அதேபோல இந்த மூன்றாவது சீசனிலும் அனுமோல், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலட்சுமி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் மீண்டும் தொடருகிறார்கள். அவர்களுடன் காயுஸ்ரீ இணைந்து இருப்பது நிகழ்ச்சியை இன்னும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. இந்த காயு ஸ்ரீ வேற யாரும் இல்லை ஆஹா கல்யாணம் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்தவர்தான். இந்த சீரியலில் முதலில் அவர்தான் வில்லியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் கேள்வி

ஆனால் பிறகு ஹீரோயினியை விடவும் இவருக்குத்தான் ஸ்ட்ராங்கான கேரக்டர் இருந்தது. அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் காயு இன்ஸ்டாகிராமில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் வைத்திருக்கிறார். டிரைலர் வெளியான பிறகு காயு டாக்டரா? புது வில்லி கேரக்டரா? அவரால கதையே மாறப்போகுதா? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். சரி என்னதான் நடக்கப்போகிறது என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+