ராமகோபாலன் கைதைக் கண்டித்து கோவையில் கடையடைப்பு
கோவை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகர் ஊர்வலத்தின்போது இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன்கைதாகி விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் கடையடைப்பை நடத்த இந்து முன்னணி அழைப்புவிடுத்துள்ளது.
இந்து முன்னணி சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்குஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தலைமை வகித்தார். திருவல்லிக்கேணி வழியாகச் சென்ற ஊர்வலம்சென்னை ஐஹ்ஹவுஸ் மசூதி வழியே செல்ல முயன்றது.
அப்போது போலீஸார், மசூதி வழியே ஊர்வலம் நடத்த விடாமல் தடுத்தார். இதையடுத்து ராமகோபாலன் அந்தஇடத்திலேயே உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து ராமகோபாலன் உள்பட 31 இந்துமுன்னணியினரைப் போலீஸார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
இதனைக் கண்டித்து கோவையில் கடையடைப்பு நடத்த இந்து முன்னணி திங்கள்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகளை அடைக்க இந்து முன்னணித் தொண்டர்கள் கூறியிருந்தபோதிலும்,பந்த்திற்கு போதுமான ஆதரவு இல்லை. ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிலர் கோவை டாடாபாத்தில் பஸ் மீதுகல்வீசித் தாக்கினர். இதுதொடர்பாக, 23 இந்து முன்னணியினரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் இந்து முன்னணித் தொண்டர்கள் 200 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகக்கைது செய்யப்பட்டுள்ளனர். நகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளான திருப்பூர்,மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications