எப்படிச் செத்தாலும் நான் தியாகிதான் .. வீரப்பன்
சென்னை:
ஹைகோர்ட் என்ன ஹைகோர்ட் தீர்ப்பு கூறுவதற்கு? நான் சொன்ன கைதிகளை விடுவித்தால்தான் நான்ராஜ்குமாரை விடுவிப்பேன். இதுதான் என் கோர்ட் தீர்ப்பு என்று வீரப்பன் கூறியதாக கோபால் தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக காட்டுக்குள் சென்றுவிட்டுத் திரும்பியுள்ள நக்கீரன் கோபால் வீரப்பனின்"திருவிளையாடல் குறித்துக் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமெனில் தனது 13 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று வீரப்பன்கூறியிருந்தான். அவற்றில் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிப்பது மற்றும்கர்நாடகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை விடுவிப்பது ஆகிய 2 கோரிக்கைகளில்மிகவும் பிடிவாதமாக இருக்கிறான்.
காட்டில் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது, ரேடியோ கேட்டுக்கொண்டிருந்த வீரப்பன்திடீரென்று எழுந்து காலவரையறையற்ற தடை என்றால் என்ன என்றான். அதற்கு விளக்கம் அளித்ததும்,மேற்கொண்டு பேசிப் பயனில்லை. நீ போகலாம் என்றார்.
உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையில் குறுக்கிட்டதன் விளைவாக சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானியின் பதவியேகாலியானதைக் கூறினேன். அதற்கெல்லாம் வீரப்பன் மசிவதாக இல்லை. வீரப்பனும், அவனுடன் கூடஇருப்பவர்களும் மிகவும் தைரியமாக இருக்கிறார்கள். கோரிக்கைகள்தான் முக்கியம் என்று அடித்துக்கூறுகிறார்கள்.
சில தியாகிகளின் பெயர்களைக் கூறி, நானும் அவர்கள் வரிசையில் இந்த வீரப்பனும் இருந்து விட்டுப் போகட்டும்.கடந்த 30 ஆண்டுகளாகப் பயப்படாத நான் இனிமேலா பயப்படுவேன்? எப்படிச் செத்தாலும் நான் தியாகி தான்?ராணுவம் சுட்டாலும் சரி. நானாக செத்தாலும் சரி என்று அலட்சியமாகக் கூறிய போது, அவர் எதற்கும் துணிந்துவிட்டார் என்று தெரிந்தது.
கடத்தல் நாடகம் தொடர்ந்தால், ராஜ்குமாரும், பிறரும் மனோரீதியில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியபோதுகான்டகரில் விமானத்தைக் கடத்தியவர்கள் 8 நாட்கள் தொலை பேசி மூலம் அரசுடன் பேச்சுவார்த்தைநடத்தினார்கள். ஆனால் எனக்கு அந்த வசதி இல்லாததால்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படுகிறதுஎன்றான்.
ராஜ்குமாரை வீரப்பன் மிகவும் மரியாதையாக நடத்துகிறார். யோகா, வாக்கிங் என்று ராஜ்குமார் மிகவும்சுறுசுறுப்பாகவே இருக்கிறார். அவரது உறவினர்கள் 3 பேர்தான் குடும்பம், குழந்தைகள் என்றுஉருகிக்கொண்டிருக்கிறார்கள் என்றார் கோபால்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications