கோவில் கட்ட அனுமதியில்லையா ... பாரீஸ் இந்துக்கள் குமுறல்
பாரிஸ்:
கோவில் கட்டக் கூட பிரான்ஸ் நிர்வாகம் அனுமதி மறுப்பதாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வசிக்கும் இந்துக்கள் குமுறுலுடன் கூறுகின்றனர்.
பாரீஸ் நகரில் 1 லட்சத்து 25,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்துசென்றவர்கள். இவ்வளவு பேர் இருந்தும் ஒரு இந்துக் கோவில் கூட இல்லை. இந்து மதப் பிரதிநிதிகள் பாரீஸில் கோவில் கட்ட முயன்றும், நகரநிர்வாக அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடுகின்றனர்.
சர்வதேச கிருஷ்ணா வழிபாட்டு அமைப்பு (இஸ்கான்) அல்லது பிற இந்து மத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கோவில் கட்டுவதற்காக நிலம் வாங்கமுயன்றாலோ அல்லது வேறு முயற்சி எடுத்தாலோ அதற்கு அந்தப் பகுதி அரசு நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. பல்வேறு விதிமுறைகளைக் காட்டிதடங்கல் ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பாரீஸ் நகரைச் சேர்ந்த மதுசூதன் சுக்காலே கூறுகையில், இந்து மதத்தை பிரான்ஸ் நாட்டினர் ஒரு மதமாகவே கருதவில்லை. அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம், கிறிஸ்தவம், இஸ்லாம், புத்த மதம் மட்டுமே. அவர்களது நாட்டு சட்டத்தில் மதம் என்ற பதத்தின் கீழ் இந்து மதம் இல்லை.எங்களை ஒரு பிரிவாகவே அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்றார்.
இலங்கையிலிருந்து 1971ல் பாரீசுக்கு இடம் பெயர்ந்தவர் சந்திரசேகரம். பாரீஸில் ஏராளமான இந்துக்கள் இருந்தும் ஒரு கோவில் கூட இல்லாததுகண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் 1985-ல் தனது பகுதியில் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம் என்ற பெயரில் ஒரு கோவிலை நிர்மானித்தார்.ஆனால் இவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டது.
சந்திரசேகரம் இதுகுறித்துக் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதில் எனக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. போலீஸார் பலவிதிமுறைகளை விதிக்கிறார்கள். மதங்கள் அனைத்துமே எதிர்மறையான கருத்துக்களை பரப்புகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள் என்றார்கோபத்துடன்.ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications