கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற புனிதத் தாய்
வேலூர்:
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றார் ஒரு புனிதத் தாய்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர் புனிதா (27). இவரது கணவர் முரளி. இவர்களுக்கு ப்ரியா(9), அரவிந்தன் (7) என்ற இரண்டு குழந்தைகள்.
சில மாதங்களுக்கு முன்பு முரளி இறந்து போனார். இதனால் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், புனிதாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.ஆனால், இடையூறு இன்றி அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
வெளியிடங்களில் சந்தித்தால் தெரிந்தவர்கள், உறவினர்கள் தொந்தரவு. வீட்டிலோ குழந்தைகள் பார்த்து விடுவார்களோ என்ற பயம்.
இதனால் என்ன செய்வது என்று குழம்பிய புனிதாவுக்கு, குழந்தைகளை விட கள்ளக்காதலும் அதனால் கிடைக்கும் சந்தோஷமுமே பெரிதாக பட்டது.குழந்தைகளை கொன்று விட்டால், கள்ளக் காதலுடன் வீட்டில் உறவு கொள்ள எந்த தடையும் இருக்காது என்று எண்ணினார்.
அதன்படி குழந்தைகளை கொன்று விட தீர்மானித்தார். பெற்ற குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தமான ஜிலேபியை வாங்கி வந்தார். அதில் விஷயத்தைகலந்து இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்தார். ஆசையுடன் அதைத் தின்ற குழந்தைகள் இருவரும் சிறிது நேரத்தில் துடி துடித்து இறந்தனர்.
காமம் கண்ணை மறைக்க பெற்ற குழந்தைகளை கொலை செய்து விட்ட நிலையில், அதை மறைக்க வழி தெரியாமல் திணறினார். அக்கம் பக்கத்தவர்மூலம் தகவல் போலீசுக்கு போக, விசாரணையில் வசமாக சிக்கிக் கொண்டார். விஷயம் தெரிந்து ஊரே அந்த குழந்தைகளுக்காக பரிதாபப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications