வன்முறையின்றி முடிந்த விநாயகர் சிலை ஊர்வலம்
சென்னை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழ நடந்த விநாயகர் சிலை ஊர்வலம் வன்முறை எதுவுமின்றி மிகவும் அமைதியாக முடிந்தது.
1000 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மெரீனா கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் கடந்த 1 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திவிழாசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் 500 பெரிய விநாயகர் சிலைகள், 5000 சிறிய சிலைகளும் வீடுகளிலும், தெருக்களிலும் வைத்து பூஜைசெய்யப்பட்டன.
இந்த சிலைகளை 10 நாட்கள் வைத்து பூஜை செய்து விட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றிலோ, கடலிலோ கரைப்பது வழக்கம்.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா போன்ற கட்சிகள் இந்த சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். சிவசேனை மற்றும் இதர கட்சியினர்தாங்கள் வைத்திருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை கரைப்பு நடந்தது. கடலில் கரைப்பதற்காக எடுத்துச் சென்ற விநாயகர் சிலைகள்ஊர்வலம் அமைதியாக நடந்தது.
தென்சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் நந்தனம் சிக்னல் வழியாகக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடற்கரைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. வடசென்னையை சேர்ந்த சிலைகள் சென்னை மருத்துவக்கல்லூரி அருகில் மொத்தமாகக் கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.பொன்னேரி தாயுமானசெட்டி தெருவிலிருந்தும் விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தையொட்டி சென்னை நகரில் முக்கிய இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் விநாயகர் சதுர்த்திஊர்வலம் எந்த அசம்பாவிதச் சம்பவமும் இன்றி அமைதியாக நடந்தது.
ராமகோபாலன் கைதாகி விடுதலை:
இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் தலைமையில் விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணி வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்துஐஸ்ஹவுஸ் மசூதி வழியே ஊர்வலம் செல்ல முயன்றது. அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
அப்போது இந்து முன்னணி தொண்டர்கள் ஆவேசத்துடன் கோஷமிட்டனர். இதையடுத்து ராமகோபாலன் உள்பட 31 பேரைப் போலீஸார் கைது செய்துவிடுவித்தனர். இதேபோல் வடசென்னை பகுதியிலும் 51 இந்துமுன்னணியினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications