பார்வதி ஷா மாமியாருக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பார்வதி ஷா கொலை வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பத்மாவதி ஷாவை ஜாமீனில்விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாண்டிச்சேரியை சேர்ந்தவர் பத்மாவதி ஷா. இவரது மருமகள் பார்வதி ஷா. இவரை கணவரின் தம்பியான கமல் ஷா கற்பழித்து கொலை செய்து விட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக கமல் ஷாவும், கொலையை மறைக்க உதவிய மாமியார் பத்மாவதி ஷாவும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதுபாண்டிச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டது. கமல் ஷாவுக்கு தூக்குத் தண்டனையும், பத்மாவதி ஷாவுக்கு 2 ஆண்டு சிறையும்விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படியும், ஜாமீனில் விடுதலை செய்யும்படியும் கோரி பத்மாவதி ஷா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை நீதிபதிகள் என்.தினகர், பாலசுப்ரமணியம் ஆகியோர் விசாரித்து பத்மாவதி ஷாவுக்கு ஜாமீன் வழங்கினர். ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீனிலும்,அதே தொகையில் 2 நபர் ஜாமீனிலும் விடுதலை செய்தனர்.

புதுவையில் தங்கி அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாரம் ஒரு முறை கையெழுத்துப் போட வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+