சந்திரிகாவை கொலை செய்ய சதி
கொழும்பு:
தேர்தல் பிரச்சாரத்தின் போது இலங்கை அதிபர் சந்திரிகாவை கொலை செய்யத் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 7 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 10 ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் அதிபர் சந்திரிகாவை தேர்தல் பிரசாரத்தின்போது கொலை செய்யத் தீட்டப்பட்டிருந்த சதி அம்பலமாகியுள்ளது.
சந்திரிகா தவிர ராணுவ துணைஅமைச்சர் அனிருதா ரத்வத்தே யையும் கொலை செய்ய விடுதலைப்புலிகள் திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்துபோலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் கொழும்பு, மட்டக்களப்பு, புசல்வா ஆகிய இடங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி 7 விடுதலைப்புலிகளைக் கைது செய்தனர். நாடு முழுவதும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை தலைமை தேர்தல் கமிஷனர் தயானந்த திசநாயகா, அங்குள்ள தனியார் அச்சகத்தில் லட்சக்கணக்கான வாக்குச் சீட்டுக்களைஅச்சடிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி புகார் கூறியுள்ளது. அரசு அச்சகத்தில் வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்காமல் தனியார்அச்சகத்தில் வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்க உத்தரவிட்டிருப்பது ஏன் என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications