"தவறுகளைத் தட்டிக் கேட்க ஆட்சியில் பங்கு தேவை
சென்னை:
ஆட்சியில் பங்கு இருந்தால் தான் தவறுகளை தட்டிக் கேட்க முடியும் என்று த.மா.கா முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமானப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருவாடானையில் நடந்த த.மா.கா. மாநாட்டில் கலந்து கொண்டு சிதம்பரம் பேசியதாவது:
தேர்தலில் தோல்வி பெரிய விஷயமல்ல. ஒரு தேர்தலோடு கட்சி செயல்முறைகள் முடிந்து விடாது. நடக்கப் போகும் தேர்தலில் கூட்டணி ஆட்சிஅமைவது உறுதி. கூட்டணி மூலம் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
நான் அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கினேன். அதுவே பா.ஜ.க ஆட்சியில் லட்சங்களாகக் குறைந்தது.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறோம். பங்கு இருந்தால் தானே தவறுகளை தட்டி கேட்க முடியும். தி.மு.க.வுடன் கூட்டணி இருந்தபோது தட்டிக்கேட்காதீர்கள். குட்டி கேளுங்கள் என்று கருணாநிதி கூறினார். ஆனால், நாங்கள் தட்டினாலும், குட்டினாலும் அவர்கள் கேட்கவில்லை.
தற்போது தமிழகத்தில் லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் நடைபெறாது. சமத்துவபுர வீடுகள் இடிந்து விழுகின்றன. சமத்துவரபுரம் கட்டுவதால்மட்டும் வீட்டு பஞ்சத்தை தீர்த்து விட முடியாது. கட்டிய 6 மாதங்களில் 100 வீடுகளில் 25 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. திராவிடக் கட்சிகளால் வறுமையை போக்கமுடியவில்லை என்றார் சிதம்பரம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications