சகோதரர்களுக்கு கஞ்சா கொடுத்த "அபூர்வ சகோதரி கைது
சென்னை:
சிறையில் இருக்கும் தன் சகோதரர்களை சந்திக்கச் சென்ற சகோதரி, பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்துக் கொண்டு தனதுசகோதரர்களுக்குக் கொடுக்க முயன்ற போது போலீசிடம் பிடிபட்டார்.
சென்னை சூளைமேடைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சற்குணம் (45). இவருக்கு மோகன், வெங்கடப்பன், குப்பன் என்ற மூன்று சகோதரர்கள்.
மூவரும் திருட்டு குற்றத்திற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக சற்குணம் வேலூர் சிறைக்குச் சென்றார்.அனுமதி பெற்று சிறையில் சகோதரர்களை சந்தித்தார்.
அப்போது சகோதரர்களுக்கு பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் கொடுத்தார். அருகிலிருந்து சிறைக் காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பிஸ்கட்பாக்கெட்டுகளை வாங்கிப் பார்த்தனர்.
சந்தேகப்பட்டபடி பிஸ்கட் பாக்கெட்டில் முன்னும் பின்னும் இரண்டு பிஸ்கட்டுகள் இருந்தன. இடையில் ஏராளமான கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.கஞ்சா பிஸ்கட்டுடன் சற்குணத்தை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications