இந்தியப் பத்திரிக்கைகளுக்கு முஷாரப் ஷொட்டு!
நியூயார்க்:
இந்தியப் பத்திரிக்கைகள் நாட்டுப்பற்றுடனும், தேச பக்தியுடனும் மிகச் சிறப்பாக, நடுநிலையுடன் செய்திகள் வெளியிடுகின்றன என்று பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மில்லினியம் வருடக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முஷாரப். நியூயார்க்கில் அவர் பாகிஸ்தான் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
இந்தியப் பத்திரிக்கைகள் நாட்டுப்பற்றுடன் மிக நேர்மையாக செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் பாகிஸ்தான் பத்திரிக்கைகள் இதற்கு நேர்மாறாகசெயல்பட்டு வருகின்றன.
இதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நியூயார்க்கில் ஐ.நா.சபைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக உரையாற்றினார் இந்தியப்பிரதமர் வாஜ்பாய். அது குறித்து, பாகிஸ்தான் பத்திரிக்கைகள் தங்கள் பத்திரிக்கைகளில் மிக விரிவாக செய்திகள் வெளியிட்டன. ஆனால் இந்தியப்பத்திரிக்கைகளோ, இந்தச் செய்திகளை வெளியிடவேயில்லை.
இந்தியப் பத்திரிக்கைகள் தேசியநலன் கருதியும், தேசபக்தியுடனும் செய்திகளை வெளியிடுகின்றன. பொறுப்பற்று முறைகேடாகவும், உண்மையை திரித்தும்,நாட்டுப்பற்றில்லாமலும் செய்திகளை வெளியிடுவது நல்ல பத்திரிக்கைகளுக்கு அழகல்ல. பாகிஸ்தான் பத்திரிக்கைகள் அவ்வாறுதான் செயல்பட்டுவருகின்றன.
பாகிஸ்தான் பத்திரிக்கைகள் அனைத்தும் முறைகேடான செய்திகளையே வெளியிடுகின்றன. பாகிஸ்தான் பத்திரிக்கைகள் பணம் வாங்கிக் கொண்டு அரசுக்குஎதிராக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது வழக்கமாகி விட்டது என்றார் அவர்.
அப்போது செய்தியாளர் ஒருவர் "டான் என்ற பாகிஸ்தான் பத்திரிக்கையில், முஷாரப் அமைச்சரவையிலுள்ள சிலரே பத்திரிக்கையாளர்களை பணம் கொடுத்துவிலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதே நேரம் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாகக் கட்டுரைகள் எழுதும்படியும் கேட்டுக் கொண்டதாகவும் செய்திவெளியாகியிருப்பதை கோடிட்டுக் காட்டினார்.
இதை ஆமோதித்த முஷாரப், இதற்கு நான் முழுக்காரணம் அல்ல. இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. இனிமேல் இதுபோன்ற செயல்கள்நீண்டகாலம் நீடிக்காது என்று பதிலளித்தார்.
நவாஸ் ஷெரீப் ஆட்சி கலைக்கப்பட்ட பின் ராணுவ ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார் முஷாரப். இவர் ஆட்சிக்கு வந்ததும் பத்திரிக்கைகளுக்குமுழுச்சுதந்திரம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications