குண்டு வெடிப்பு வழக்கில் புது வக்கீல்கள் நியமனம்
கோவை:
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் அரசு தரப்பு வக்கீல் விலகியதைத் தொடர்ந்துபுதிய வக்கீல்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 167 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதில் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா,கேரள ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் மதானி ஆகியோரும் உள்ளனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஜி. சவுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் அரசு தனக்கு செலவு தொகை மற்றும் தங்கும் விடுதிச் செலவு ஆகியவைஅளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். அரசு கடந்த 3 மாதங்களாக செலவு தொகைமற்றும் கட்டணத்தை அளிக்காததால் வழக்கில் வாதாடமல் விலகுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அரசு உடனடியாக வேறு இரண்டு வக்கீல்களை நியமித்துஉத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஏ.கே ராஜேந்திரன், மற்றும் ஜி. கே சுந்தரம்ஆகியோர் இனி இந்த வழக்கில் ஆஜராகவுள்ளனர்.
இவர்களை நியமனம் செய்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:
கோவை குண்டு வெடிப்புச் சம்பவ வழக்கில் ஜி சவுந்தர்ராஜன் விலகியதையடுத்துபுதிய வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர்.
சவுந்தர்ராஜனுக்கு ஒரு முறை ஆஜராக கட்டணமாக ரூ. ஆயிரத்து 500ம், வழக்குகட்டணமாக ரூ. 15 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்,வழக்குக் கட்டணமாக ரூ. 50 ஆயிரம், ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராக ரூ. 3ஆயிரத்து 500-ம், மனு தயார் செய்ய ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.
சென்னையிலிருந்து கோவை வர ரயிலில் குளிர் சாதன வசதியுள்ள முதல் வகுப்பு ரயில்பெட்டி, அல்லது விமானக் கட்டணம் ஆகியவை கோரி கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், தங்குவதற்கு 4 நட்சத்திர அந்தஸ்துள்ள விடுதியும் அளிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். எனவே, அரசு இவர் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வந்தது.
ஆனால், அவர் இந்த வழக்கிலிருந்து விடுபடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அரசுதற்போது இரண்டு வக்கீல்களை நியமனம் செய்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஏ.கேராஜேந்திரன், ஜி.கே சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தாமரைச்செல்வி, மற்றும் மூத்த வக்கீல் டி.பாலசுந்தரம் ஆகியோர் உதவியாக செயல்படுவர்.
இதனால், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல்தொடர்ந்து நடக்கும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications