ரூ. 463 கோடி செலவில் 10 விமானங்கள் வாங்குகிறது ஜெட் ஏர்வேஸ்
லண்டன்:
இந்தியாவில் விமானப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.463 கோடி செலவில் மேலும் 10 விமானங்களை வாங்க உள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸுடன் சேர்ந்து ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்கும் முடிவுக்கும்,புதிய விமானங்கள் வாங்கும் முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய மண்டல மேலாளர் ராஜ் தேசாய் தெரிவித்தார்.
புதிய தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆய்வதற்காக பிரிட்டன் வந்துள்ள இந்தியஐக்கிய தொழில் வர்த்தக சபைக் (அஸ்ஸோசாம்) குழுவில் உறுப்பினராக உள்ள அவர்மேலும் கூறியதாவது:
ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.அதே நேரத்தில் வெளிநாட்டுப் பயணிகளின் வசதிக்காக இந்தியாவில் உள்நாட்டுவிமானப் போக்குவரத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் துறையில் சுற்றுலா மூன்றாவது இடத்தில்உள்ளது. இந்தியாவுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஏராளமானசுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமானஅளவுக்குச் செய்து தரப்படவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும்.
சீனாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அங்கு 274 விமானங்கள் இயக்கப்படுகின்றன.ஆனால், இந்தியாவில் வெறும் 82 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.ஏனெனில் ஜெய்ப்பூர், ஆக்ரா போன்ற ஒரு சில குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்குமட்டுமே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.
அந்த சில நகரங்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகள்செய்து தரப்பட்டுள்ளன. அந்த நகரங்கள் மட்டுமே மற்ற பெரிய நகரங்களுடன் சாலை,ரயில் மற்றும் விமானத் தொடர்பைக் கொண்டுள்ளன.
இந்த நிலை மாறவேண்டும். இந்தியாவின் மூலை முடிக்குக்கெல்லாம் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கான வாய்ப்பு வசதிகளை உருவாக்கவேண்டும்.
அதுதான் இந்திய பொருளாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது. சுற்றுலாப்பயணிகளும் நீண்ட நாள் இந்தியாவில் தங்குவார்கள்.
ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்திய அரசு முடிவு செய்துஅதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 26 சதவீதமும், இந்திய நிறுவனங்களுக்கு 14சதவீதமும், சர்வதேச முதலீட்டாளர்கள், ஏர்-இந்தியா நிறுவன ஊழியர்கள்ஆகியோருக்கு 20 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீதத்தை இந்தியஅரசே வைத்துக் கொள்ளும்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் பிரான்ஸ், டெல்டா, லுப்தான்சா,விர்ஜின் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களும் ஜெட், சகாஹா, ஹிந்துஜா ஆகியஉள்நாட்டு நிறவனங்களும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க விரும்பம்தெரிவித்துள்ளன.
இப்போதுள்ள சூழ்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸும், ஜெட் ஏர்வேஸும் சேர்ந்து 40சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல்அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் தேசாய்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications