மேட்ச் பிக்ஸிங் வழக்கு .. கிங் கமிஷன் வக்கீல்கள் இந்தியா வருகை
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிங் விசாரணை கமிஷனின் வழக்கறிஞர்கள் இந்தியாவரவுள்ளனர்.
வழக்கறிஞர்கள் இந்தியா வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அடுத்த சில வாரங்களில் இவர்கள் இந்தியா வரலாம் என்றும்அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது அந்த அணியின் கேப்டன் ஹான்சி குரோனியேஇந்தியாவில் உள்ள சில கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சஞ்சீவ் சாவ்லா என்ற கிரிக்கெட் சூதாட்டக்காரருடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குரோனியே தொலைபேசியில் பேசியதை டெல்லி போலீஸார்பதிவு செய்தனர். இதையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பொறுப்பிலிருந்தும், அணியிலிருந்தும் குரோனியே நீக்கப்பட்டார்.
முதலில் தன் மீதான மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டை மறுத்த குரோனியே பின்னர் அதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகுறித்து விசாரிக்க எட்வர்ட் கிங் தலைமையில் தனி விசாரணை கமிஷனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்தது.
இந்த விசாரணை கமிஷன், குரோனியேவிடம் பல முறை விசாரணை நடத்தியது. அது தவிர இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட மற்றவீரர்களிடமும் விசாரணை நடத்தியது.
குரோனியேவுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தியாவில்விசாரணை நடத்த கிங் விசாரணை கமிஷன் முடிவு செய்தது.
அதன்படி அக் கமிஷனின் வழக்கறிஞர்கள் அடுத்த சில வாரங்களில் இந்தியா வர உள்ளனர். டெல்லி போலீஸ், கிரிக்கெட் வாரிய அதிகாரிகள்,கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைவரிடமும் அவர்கள் விசாரணை நடத்துவார்கள்.
கிங் கமிஷன் வழக்கறிஞர்கள் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தகவல் தரப்பட்டுள்ளது என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications