பெண்கள் கால்பந்துப் போட்டியுடன் தொடங்குகிறது சிட்னி ஒலிம்பிக்
Subscribe to Oneindia Tamil
மெல்பெர்ன்:
பெண்கள் கால்பந்துப் போட்டியுடன் இந்த மில்லினியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டிதொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வரும் வெள்ளிக்கிழமை கால்பந்துப்போட்டிகள் தொடங்குகின்றன. ஆனால், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பேபுதன்கிழமையே ஆட்டங்கள் தொடங்குகின்றன.
சிட்னி நகரில்தான் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது என்றாலும், கால்பந்துப்போட்டிகள் மெல்பெர்ன், அடிலெய்டு, கான்பரா, பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில்நடைபெற உள்ளன.
இந்த சிட்னி ஒலிம்பிக் போட்டியின் முதல் ஆட்டம் பெண்களுக்கான கால்பந்துஆட்டமாகும்.
மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில்ஸ்வீடன் நாட்டு அணியும், பிரேஸில் அணியும் மோதுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications