இலங்கையில் ஒரு சேஷன் ... சந்திரிகாவுக்குத் தலைவலி
கொழும்பு:
இலங்கையில் தலைமை தேர்தல் கமிஷனர் தயானந்த திசநாயகேவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிபர்சந்திரிகாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் அக்டோபர் 10 ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியும், அடையாள அட்டை அச்சடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் போடுவதற்காக போலி அடையாள அட்டைகள் அச்சடிக்கப்படுவதாக தேர்தல் கமிஷனுக்குப் புகார்வந்தது. இதையடுத்து தேர்தல் கமிஷனர் தயானந்தா, தேர்தல் கமிஷன் வழங்கும் அடையாள அட்டையில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இப்படி ஸ்டிக்கர் ஒட்டுவதால் போலி அடையாள அட்டைகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்று அவர் தெரவித்திருந்தார். ஆனால் இதுகுறித்துஆளும்கட்சினருடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று மூத்த அமைச்சர் ஒருவர் கண்டித்துள்ளார்.
அடையாள அட்டைகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது குறித்து அரசிடம் விவாதிக்கவில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளார். மேலும் தனியார் அச்சகத்தில்அடையாள அட்டைகளை அச்சடிக்க உத்தரவிட்டுள்ளார் என்று ஆளுங்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையே தனது செயலில் தவறு இல்லை என்று தேர்தல் கமிஷனர் திசநாயகே கூறியுள்ளார். பொதுத் தேர்தலுக்காக தனியார் அச்சகங்களில் அடையாளஅட்டை அச்சடிக்கக் கொடுத்தது உண்மைதான். போலி அடையாள அட்டைகளை கண்டுபிடிக்கும் எண்ணத்தில் தான் அடையாள அட்டைகளில் ஸ்டிக்கர் ஒட்டஉத்தரவிட்டேன். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை.
இதற்காக என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சர் கூறுகிறார். என் மீது தவறு இருந்தால் நடவடிக்கைஎடுக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தற்போது, திசநாயகேவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது அலுவலகத்துக்கும், வீட்டிற்கும் தொடர்ந்து மிரட்டல்அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரது அலுவலகத்துக்குள் புகுந்து அவரைவீட்டுக்குச் செல்ல விடாமல் தடுத்தது.
இதையடுத்து அவர் ராணுவ செயலாளர் சதானந்தா. டி.சில்வா வைத் தொடர்பு கொண்டு தனக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்துஅவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கைப் பத்திரிகைகளில் அரசைக் கண்டித்து செய்திகள் வந்துள்ளன. தேர்தல் நடவடிக்கைகள், வாக்குச்சீட்டுக்கள், அடையாள அட்டைகள்அச்சடித்தல் போன்ற செயல்களில் தேர்தல் ஆணையத்துக்கும், தேர்தல் கமிஷனருக்கும் முழு அதிகாரம் உள்ளது.
தேர்தல் அதிகாரி தயானந்தா எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. போலி அடையாள அட்டைகளை இனம் கண்டறிவதற்காகத்தான் அவர்அரசு அடையாள அட்டைகளில் ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவிட்டிருக்கிறார். இதில் தவறு எதுவுமில்லை என்று அவை வெளியிட்டுள்ளன..
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications