ஆசிரியரை எதிர்த்து பார்வையற்ற மாணவர்கள் உண்ணாவிரதம்
சேலம்:
தலைமை ஆசிரியரை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த 40 கண்பார்வையற்ற மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலத்தில் கண் பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் 106 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ராமசாமி என்பவர் தலைமைஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது கண் பார்வையற்றோருக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்று விட்டுவிட்டதாகப் போராட்டம் நடந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இப்போராட்டத்தால் இந்தப் பள்ளியிலிருந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் இந்தப்பள்ளிக்கே அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்ளாகத் தொடர்ந்த இந்த உண்ணாவிரதத்தில், 33மாணவர்களும், 7 மாணவிகளும் மயக்கமடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாவட்டக் கலெக்டர் நசீமுதினிடம் மனுக் கொடுத்தனர். ஒரு வாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதாகக் அவர்பதிலளித்திருந்தார். தற்போது இப்பிரச்னையையடுத்து, தலைமை ஆசிரியர் ராமசாமி, விடுமுறையில் சென்று விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications