கடன்காரர்களின் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் .. வங்கி ஊழியர்கள்
கோவை:
வங்கிகளிடமிருந்து கடனைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வீடுகளின் முன்பாக பொதுமக்களின்ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஈரோட்டில் நடந்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு சங்கத்தின் இணைச்செயலர் வெங்கடாச்சலம் பேசியதாவது:
இந்தியாவில் வங்கிகள் கொடுத்த கடன்களில் வசூலாகாத கடன்கள் அதிகம் உள்ளன. தேசியமயமாக்கப்பட்டமற்றும் இதர வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன் தொகை ரூ. 58 ஆயிரம் கோடி ரூபாயாகும். இவற்றில் 7 ஆயிரம்கோடி ரூபாய் வேளாண்மைத் தொழிலுக்காக வழங்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் கோடி ரூபாய் பெரும்பணக்காரர்கள் தான் பெற்றுள்ளனர்.
விவசாயிகள் காலச் சூழ்நிலைக்கேற்ப விவசாயம் செய்து வருகின்றனர். சில நேரங்களில் மழை பெய்யாவிட்டால்,பெரும் நஷ்டத்திற்குள்ளாகின்றனர். இதனால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் காலதாமதம்,சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
இவர்களது கடன்கள் வங்கிகளின் அசையாச் சொத்தாக மட்டுமே மதிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பணக்காரர்கள், தாங்கள் பெறும் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாது எனக் கூறுவது எந்த விதத்திலும் சரியானதுஅல்ல. இவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு தான் உள்ளனர். இதில் லாபம்சம்பாதிக்கின்றனர்.
கடனை மட்டும் திருப்பிச் செலுத்த மறுத்து வருகின்றனர். இத்தகைய பணக்கார தொழிலதிபர்கள் கோடிக் கணக்கில்பாக்கி வைத்துள்ளனர். இதனை வசூலிக்க அகில இந்திய வங்கிகளின் சங்க உறுப்பினர்கள், அவர்களது வீடுகளின்முன்பு பொதுமக்களின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
வங்கிகளைத் தனியார்மயாக்குதல் -மூலம் பெரும் தொழிலதிபர்கள் வாங்கிய கடனை ரத்து செய்ய முடியும்.இவர்களுக்கு உதவும் வகையில் தான் தனியார்மயமாக்க வங்கிகள் முயற்சித்து வருகின்றன. வங்கிகளைத்தனியார்மயாக்கினால், டெபாசிட்தாரர்களுக்குக் கூட பாதுகாப்பு கிடையாது.
வங்கிகளில் பொதுமக்கள் 8.5 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். இந்த டெபாசிட் தொகை கடந்த 69ம் ஆண்டில் 4 ஆயிரத்து 646 கோடியாக மட்டுமே இருந்தது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியர்களின் சேவை மனப்பான்மை சரியானதாக இல்லை என்ற புகார்கள்கூறப்பட்டு வருகின்றன. இந்தப் புகாரை இந்த சங்கம் பரிசீலனை செய்து வருகிறது. பொதுமக்களுக்கு சேவைசெய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி உறுப்பினர்களிடையே பிரச்சாரஇயக்கம் மேற்கொள்ளப்படும்.
வங்கிகளின் அசையா சொத்தாக கருதப்பட்ட கடன்கள், கடன் வழங்குவதற்கான விதிமுறைகளைஎளிமைப்படுத்த வங்கி ஊழியர்கள் சங்கம் யோசனை கூறியது. ஆனால் இவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
மாறாக, இந்த யோசனை தெரிவித்த ஊழியர்களையெல்லாம், தானாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ்,ஓய்வு பெற வைத்து விட்டது என்றார் வெங்கடாச்சலம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications