பொய் கண்டறியும் கருவியிடம் "சிக்க" விரும்பாத பிரபாகர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொய் கண்டறியும் கருவியிடம் சோதனை செய்து கொள்ள மனோஜ் பிரபாகர்இன்னும் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்தனர்.

முக்கியமான வழக்குகளில் ஒருவர் பொய் சொல்கிறாரா, அவர் சொல்வதுஉண்மைதானா என்பதைக் கண்டறிய பொய் கண்டறியும் கருவி பயன்படுத்தப்படும்.

குறிப்பிட்ட நபரிடம் விசாரணை நடத்தப்படும்போது அவரது உடலுடன் அக் கருவிஇணைக்கப்படும். விசாரணையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பொய்சொல்வது தெரிந்தால் அதை அக் கருவி கண்டுபிடித்துவிடும்.

சமீப காலத்தில் இந்திய கிரிக்கெட் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்ததற்குமூலகாரணம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் மோசமாக விளையாடினால் ரூ. 25 லட்சம்தருகிறேன் என்று அப்போது அணியில் ஒரு வீரராக இருந்த கபில்தேவ் தன்னிடம்கூறியதாக பிரபாகர் குற்றம் சாட்டினார்.

இக் குற்றச்சாட்டை அடுத்து வேறு சில வீரர்கள் மீதும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்குமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தவிர வேறு பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.

பிரபாகர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் கபில்தேவ். ஆனால், தான் கூறியகுற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ஒரு விடியோ கேஸட்டைக் கொண்டு வந்தார் பிரபாகர்.

இந் நிலையில், சிபிஐ தனது விசாரணையைத் தீவிரபடுத்தியது. இம் மாத இறுதியில்தனது இடைக்கால விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சிபிஐ சமர்ப்பிக்கஉள்ளது.

அதற்கு முன்னதாக பிரபாகர் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொய் கண்டறியும்கருவியிடம் பிரபாகரைச் சோதனை செய்ய சிபிஐ விரும்பியது. இது தொடர்பாகபிரபாகருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

ஆனால், இதுவரை பிரபாகரிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று விசாரணைக்குழுவின் தலைவரும் சிபிஐ இணை இயக்குநருமான ஆர்.என். சவானி தெரிவித்தார்.

சிபிஐயின் உயர்மட்டக் குழு அளவில் ஆலோசித்துத்தான் பிரகாரிடம் பொய்கண்டறியும் கருவியை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரைஅவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இவ் விவகாரத்தில் பிரபாகரை நிர்பந்திக்க விரும்பவில்லை. நிர்பந்திக்கவும்மாட்டோம். பிரபாகராக முன்வந்து சோதனை செய்துகொள்ள விரும்பினால் அவரிடம்சோதனை நடத்துவோம்.

ஆனால், இம் மாத இறுதியில் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியநிலையில், பிரபாகருக்காக நீண்ட நாட்கள் நாங்கள் காத்திருக்கமாட்டோம்.குறிப்பிட்ட நேரத்தில் எங்களது அறிக்கையை நாங்கள் சமர்ப்பிப்போம்.

சோதனை செய்துகொள்ள பிரபாகர் முன் வந்தால் இவ் விவகாரத்தில் உண்மையைக்கண்டறிய எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிரபாகர் கூறிய குற்றச்சாட்டுக்குஆதாரம் ஓரளவு ஆதாரம் கிடைத்துள்ளது.

ஆனால், அதை நிரூபிக்க பிரபாகரிடம் பொய் கண்டறியும் கருவியை வைத்துசோதனை நடத்தினால் முழுமையான உண்மை தெரியவரும்.

எங்களது விசாரணைக்கு இணையாக வருமான வரித் துறை அதிகாரிகளும் சிலகிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பான எங்களது விசாரணைக்கு வருமான வரித் துறையினர்தங்களிடமுள்ள ஆவணங்களையும், தகவல்களையும் கொடுத்து உதவியுள்ளனர்என்றார் சவானி.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+