பெண்களை கற்பழித்த மிராசுதார் கைது
விருதுநகர்:
விருதுநகரில் நான்கு பெண்களை கற்பழித்த காமக்கொடூரனான மிராசுதார் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தால் விருதுநகர் மாவட்டமே கொந்தளித்துப் போயிருக்கிறது. மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்திற்காககளமிறங்கிக் கொண்டிருக்கின்றன.
விஷயம் இதுதான். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகன். மிராசுதார். இவர்களுக்கு சொந்தமானபெரிய காம்பவுண்ட் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் இருக்கிறது. இங்கு ஏராளமானபேர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
ஜெகன் பெண்களிடம் வம்பு செய்வது, அவர்களை ஆசை வார்த்தை கூறி கற்பழிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாராம்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த காம்பவுண்டில் குடியிருந்த நான்கு இளம் பெண்களை டி.வி பார்க்கலாம் வாருங்கள் என்று கூறி அழைத்துச் சென்றுஅவர்களை கற்பழித்து விட்டாராம்.
பெரிய இடத்துப்பிள்ளை என்பதால் யாரும் இந்த சம்பவத்தைப்பற்றி மூச்சு விடுவதில்லை. இது ஜெகனுக்கு வசதியாக போய்விட்டது. வியாழக்கிழமைஇதுபோல் ஒரு பெண்ணை ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தியுள்ளார்.
இதைப்பார்த்த இன்னொரு பெண் ஏன் இப்படி அட்டூழியம் செய்கிறாய் உனக்கு வேறு வேலையே கிடையாதா என்று சத்தம் போட்டு இருக்கிறார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் அந்தப் பெண்ணின் புடவையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயற்சித்தாராம்.
ஜெகனின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரிக்கவே, இனியும் இவனை விட்டால் ஏரியாவில் பெண்களே குடியிருக்க முடியாது என்று கருதிய அப்பகுதிபெண்கள் போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தாய் அனந்தம்மாள் என்பவர் அருப்புக்கோட்டை டவுண் போலீஸ் ஸ்டேஷனில் புகார்கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து ஜெகனை கைதுசெய்ய முயற்சித்த போது போபாஸ் என்ற ரவுடி தடுத்தானாம். ஆனாலும் போலீஸார் ஜெகனையும், அந்தரவுடியையும் கைது செய்தனர். கற்பழிப்பு மன்னன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications