கொஞ்சம் இறங்கி வருகிறார் ஜெயா
சென்னை:
கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலின் போது முடிவு செய்யப்படும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
த.மா.கா.வின் கூட்டணி ஆட்சி கோரிக்கை பற்றி கேட்ட போதெல்லாம் கொதித்துப் போய் "அதெல்லாம் முடியாது என்றுபதிலளித்து வந்த ஜெயலலிதா, இப்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்வோம் என்றுபக்குவமாக பதிலளித்துள்ளார்.
சென்னையில் வெள்ளிக் கிழமை அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக போயஸ் தோட்டத்தை விட்டுவெளியே வந்தார் ஜெயலலிதா. எப்போது வருவார் அவரை சந்திக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கூட்டம்,அண்ணா சிலை அருகே அவரை சூழ்ந்தனர்.
ஜெயலலிதா அளித்த பேட்டி:
கேள்வி: சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க அணி வெற்றி பெற்றால் கூட்டணி அரசு அமைப்பீர்களா?
பதில்: இந்த பிரச்னையில் அ.தி.மு.க.வின் நிலை என்ன என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டேன். தேர்தலுக்கு பின்அ.தி.மு.க தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளேன்.
கேள்வி: நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், த.மா.கா. கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தினால்என்ன செய்வீர்கள்?
பதில்: தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன. தேர்தலுக்கு பின்பு கூட்டணி அரசு அமைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில்தோழமைக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.
கேள்வி: காளிமுத்துவுக்கும் (அதிமுக), காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறதே.போகிற போக்கை பார்த்தால் கூட்டணியே வேண்டாம் என்று இளங்கோவன் ஓடி விடுவார் போல் இருக்கிறதே?
பதில்: அதெல்லாம் ஒன்றும் கிடையாது. நீங்கள் தான் (பத்திரிக்கைகள்) சின்ன சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்துகிறீர்கள். என்னைப்பொருத்தவரையில் இது ஒரு பிரச்னையே இல்லை. சேலம் உருக்காலை விவகாரத்தில் கூட எங்கள் அழைப்பை ஏற்று எல்லாகட்சிகளும் வந்தன. எனவே இளங்கோவன் - காளிமுத்து மோதலால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது.
கேள்வி: நீங்கள் தலையிட்டு சமரசம் செய்யலாமே?
பதில்: அதற்கு அவசியமே இல்லை என்கிறேன் நான். நீங்கள் தான் எல்லாவற்றையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கிறீர்கள்.
கேள்வி: தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறீர்களாமே?
பதில்: ஆமாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications