தி.மு.க.வின் முப்பெரும் விழா தொடங்கியது
சென்னை:
தி.மு.கவின் முப்பெரும் விழா சென்னையில் வெள்ளிக் கிழமை தொடங்கியது
அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க தோன்றிய நாள் ஆகிய மூன்றையும் முப்பெரும் விழாவாக ஆண்டு தோறும் செப்டம்பர் 15முதல் 17ம் தேதி வரை தி.மு.க கொண்டாடி வருகிறது.
இதையொட்டி மூன்று நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வாடிக்கை. அதன்படி சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்நாள் நிகழ்ச்சிகள் வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு துவங்கியது.
முதல் நாள் நிகழ்ச்சிக்கு தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்தார். தி.மு.க தலைவரும், முதல்வருமான கருணாநிதி, மேல்நிலைமற்றும் உயர் நிலைப் பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தி.மு.க அறக்கட்டளை சார்பில் நிதியுதவி அளித்தார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவமாணவிகளுக்கு சன்றிதழ்கள் வழங்கினார் முதல்வர்.
இந்நிகழ்ச்சியில் சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சான்றிதழ்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இரவில் விருதுகள் வழங்கும் விழாநடைபெற்றது. இவ்வாண்டுக்கான பெரியார் விருது தென்னவனுக்கும், அண்ணா விருது சுப.தங்கவேலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதுஅமுதனுக்கும், கலைஞர் விருது திராவிடமணிக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்தார் முதல்வர். பின்னர் சங்கத்தமிழ் இசை நாட்டியநாடகம் நடைபெற்றது.
சனிக்கிழமை மாலையில் வள்ளுவர் கோட்டத்தில் பல்கலை மேடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தி.மு.க இளைஞரணி சார்பில் நடைபெறும். இவ்விழாவில்மேயஸ் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இவ்விழாவில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியினர் நடத்தும் "வேர்கள் விழுதுகள் என்ற சிறப்புநிகழ்ச்சி இடம் பெறுகிறது.
17ம் தேதி மாலை முப்பெரும் விழாப் பொதுக் கூட்டம் சென்னை கடற்கரையில் நடைபெறுகிறது. நாகூர் ஹனீபா இசையுடன் துவங்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மாறன் ஆகியோர் பேசுகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications