கிரிக்கெட் ஊழல்: தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் இந்தியா வருகின்றனர்
கேப் டவுன்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியத்தின் கிங் விசாரணை கமிஷன் அதிகாரிகள் இந்தியாவருகின்றனர். அதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டது. அப்போது கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் சேர்ந்து மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஹான்சிகுரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து இக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி கிங் எட்வர்ட்தலைமையில் தனி விசாரணை கமிஷனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்நியமித்தது.
இக் கமிஷன் குரோனியே உள்பட பலரிடம் விசாரணை நடத்தியது. குரோனயே மீதுகூறப்பட்ட இக் குற்றச்சாட்டில் இந்திய வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும்கூறப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் விசாரணை நடந்த விசாரணை கமிஷன்முடிவு செய்தது.
அதன்படி இக் கமிஷனின் விசாரணை அதிகாரிகள் ஷாமிலா பதோஜி, ஜியாஃப்எட்வர்டு இருவரும் இந்தியா வருகின்றனர். ஒருவாரம் இந்தியாவில் தங்கியிருந்துஇந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இவர்கள் விசாரணைநடத்துவார்கள் என்று தெரிகிறது.
குரோனியே மீது முதன் முதலாக மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டைக் கூறிய டெல்லிபோலீஸ் அதிகாரிகளிடமும் அவர்கள் விசாரணை நடத்த உள்ளனர்.
அக்டோபர் 2-ம் தேதிக்குள் தனது விசாரணை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டிய நிலையில் கிங் கமிஷன் உள்ளது. இதையடுத்து இந்தியாவில் விசாரணைநடத்த கிங் கமிஷன் அனுமதி கோரியது.
இந்தியாவில் கூறப்பட்டுள்ள மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக குரோனியேவிடம்விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், அவரை இந்தியாவுக்கு அனுப்பவேண்டும் என்று இந்தியா கோரியது.
ஆனால், இரு நாட்டுக்கும் இடையே ஒருவரை ஒரு வழக்குக்காக அழைத்துவருவதற்கு எந்த ஒப்பந்தமும் இல்லை. இதனால், குரோனியேவை இந்தியாவுக்குஅனுப்ப தென் ஆப்பிரிக்கா மறுத்துவிட்டது.
இதனால், கிங் கமிஷன் அதிகாரிகள் இந்தியாவில் விசராணை நடத்த இந்திய அரசுமறுத்துவிட்டது. பின்னர் கிங் கமிஷன் அதிகாரிகளின் தொடர் வற்புறுத்தலால்விசாரணை நடத்த இந்தியா அனுமதி கொடுத்தது.
இதையடுத்து கிங் கமிஷன் விசாரணை அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர்.இந்தியாவில் விசாரணை நடத்த உள்ள அதிகாரிகள் குறிப்பாக, இந்திய அணியின்முன்னாள் கேப்டன் அசாருதீனிடம் முழுமையான விசாரணை நடத்துவார்கள் என்றுகருதப்படுகிறது.
ஏனெனில் தான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிரிக்கெட்சூதாட்டக்காரரை என்னிடம் அறிமுகப்படுத்தியதே அசாருதீன்தான் என்று குரோனியேகூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications