ஐ.நா. மில்லினியம் கூட்டத்தில் வைகோ
சென்னை:
ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரமாவதாண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 6தலைவர்கள் கொண்ட குழு, அடுத்த மாதம் 16ம் தேதி அமெரிக்கா செல்கிறது.
இதுகுறித்து ம.தி.மு.க வெளியிட்ட அறிக்கை:
ஐ.நா. பொதுச்சபையின் 55வது வருடாந்திரக் கூட்டம் புத்தாயிரமாண்டுச் சிறப்புக் கூட்டமாகத் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின்துவக்கத்தில் உலகில் முதல் முறையாக 160 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 5ம் தேதி வரைநடைபெறவிருக்கிறது. தொடர்ந்து நடைபெறும் விவாதங்களின் அடிப்படையில் புத்தாயிரமாண்டுக் கூட்டறிக்கை வெளியிடப்படும்.
மிக முக்கியமான இந்தக் கூட்டத் தொடரில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை, பிரதமர் வாஜ்பாய்தேர்ந்தெடுத்துள்ளார். வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இந்திரஜித் குப்தா, பா.ஜ.க.வை சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால்குரானா, காங்கிரசை சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த பிரேம்சிங் ஆகியோர் இக்குழுவில்இடம்பெற்றுள்ளனர்.
21ம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள், முன்னுரிமைகள் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள்சபையின் பொதுச்செயலாளர் கோபி அன்னான் தொடக்கத்திலேயே சில பிரச்னைகளை முன் வைத்துள்ளார்.
அதனடிப்படையில் விவாதங்கள் நடைபெறும். இந்திய பிரதமர் வாஜ்பாய் செப்டம்பர் 8ம் தேதி இக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் 11ம் தேதி உரையாற்றினார்.
வைகோ உள்ளிட்ட இந்தியக் குழுவினர் அக்டோபர் 16ம் தேதி தல் 27ம் தேதி முடிய இருவார காலம் தினந்தோறும் ஐ.நா.சபையின் கூட்டத் தொடரில்கலந்து கொள்வர்.
உலகளாவிய அணு ஆயுதங்கள் ஒழிப்பு, ஐ.நா. பாதுகாப்பு சபையை திருத்தியமைப்பது, சர்வதேச பயங்கரவாதம், ஆப்கனிஸ்தான் உள்பட சர்வதேச நாடுகள்எதிர்கொள்ளும் மேலும் 180 பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களின் அடிப்படையில் வரலாற்றுச் சிறப்புமிக்கபுத்தாயிரமாண்டுக் கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications