குடிபோதையில் போலீஸ்காரர்களை கடித்த வாலிபர்கள்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீஸ்காரர்களிடம் தகராறு செய்து, அவர்களைக் கடித்தநான்கு பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியைச் சேர்ந்த பன்னீர் செல்வம், பிரபு ஆகிய இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில்உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். இவர்கள் இருவரும், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வசித்து வந்தபாலபாரதி மற்றும் அரியசாமி ஆகியோருடன் சேர்ந்து அங்குள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப்பகுதி வழியே பாலுச்சாமி (30), மற்றும் வெங்கடேஷ் (32) ஆகிய இரண்டு பேரும் ரோந்துசுற்றிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் திடீரென்று அந்த நான்கு வாலிபர்களும் சேர்ந்து கொண்டுபோலீஸ்காரர்களை வம்புக்கு இழுத்து அடித்து உதைத்தனர்.
பிறகு, போலீஸ்காரர்களின் முகம், மார்புப் பகுதிகளில் கடித்துக் குதறினார்கள் என்றும் கூறப்படுகிறது. போலீஸ்காரர்வெங்கடேசனின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியையும் அவர்கள் பறித்துச் சென்று விட்டனர் என்றும்கூறப்படுகிறது.
படுகாயமடைந்த போலீஸ்காரர்கள் இருவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர். தகராறு செய்த நான்கு வாலிபர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் குடிபோதையில் அவர்கள் இத்தகராறில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications