வீரப்பன் காட்டுக்குள் சுரங்கப் பாதைகளா?
சென்னை:
சத்தியமங்கலம் காட்டுக்குள் வீரப்பனுடன் இருக்கும் தீவிரவாதிகள் அங்கே ரகசியமாக சுரங்கப்பாதைகள் அமைத்துள்ளனர் என்ற தகவல்கள்கிடைத்துள்ளன.
ராஜ்குமார் விடுதலை தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அவர் கடத்தப்பட்டு 46 நாட்கள் ஆன நிலையில் எந்த முடிவுகளும் தெரியவில்லை.
தமிழக அரசு தரப்பில் இருந்து வீரப்பன் நாடகத்தை தீவிரமாகவே கண்காணித்து வருகிறார்கள். மூன்று முறை அரசுத் தரப்பிலிருந்து தூதர் அனுப்பியும்எதுவும் நடக்கவில்லை.
காட்டுக்குள் விவகாரமாக ஏதோ நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அரசு ராஜ்குமாரை விடுவித்து விட்டால் இதுவரை இருந்த ஒட்டு மொத்தகோபத்தையும் தமிழக, கர்நாடக அரசுகள் காட்டும் என்று கருதுகின்றனர் வீரப்பனுடன் இருக்கும் தீவிரவாதிகள். தேவைப்பட்டால் ராணுவத்தையும்அழைக்கும் தமிழக அரசு என்று உறுதியாக நம்பத் தொடங்கி விட்டதாம் காட்டுக்குள் இருக்கும் வீரப்பன் குழுவினர்.
அப்படி நடந்தால், இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று மிகத் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம் தமிழ்தீவிரவாதிகள்.காட்டுக்குள் பல இடங்களில் சுரங்கங்கள் தோண்டி வைக்கப்பட்டுள்ளது. அதிரடிப்படையோ, ராணுவமோ காட்டிற்குள் தேடுதல் வேட்டையைதொடங்கினால் சுரங்கப்பாதைக்குள் சென்று பதுங்கிக் கொள்ளலாம்.
ஒரு இடத்தில் தோண்டப்பட்ட சுரங்கம் அடுத்து உள்ள இன்னொரு சுரங்கத்தின் வழியே வெளியே சென்று விடலாம் என்பது மாதிரி பல புதிய சுரங்கப்பாதைகள்அங்கே அமைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார்கள் தமிழக அதிகாரிகள்.
சுரங்கத்தை விட்டு பல நாட்கள் வெளியே வராமல் இருக்க தேவையான உணவுப்பொருட்கள், குடிதண்ணீர், துணிகள் என்று பலவும் சுரங்கத்திற்குள்சேமிக்கப்பட்டு வருகிறது என்றும் தீர்மானமாக நினைக்கிறார்கள் அதிகாரிகள்.
ஒரு சுரங்கத்தில் மட்டுமல்ல, ஒரு சுரங்கத்தில் இருந்து மற்றொரு சுரங்கத்திற்கு செல்லும் பொழுது தேவையான பொருட்களையும் கொண்டு போக முடியாதுஎன்பதால் ஒவ்வொரு சுரங்கப் பாதைக்கும் தேவையான பொருட்களை ஆங்காங்கே சேமித்து வைத்திருக்கிறார்களாம்.
ராஜ்குமாரை விடுவித்துவிட்டால், காட்டுக்குள் பெரிய அளவிலான ஆப்ரேஷன் என்று களமிறங்குவார்கள் அதிரடிப்படையினர். இதுவரை அதிரடிப்படையினர்நடத்திய தாக்குதல்கள் என்பது வேறு இப்பொழுது நடக்க இருப்பது வேறு. ஹெலிக்காப்டர், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் என்று மிகப்பெரிய அளவில்தாக்குதல் நடத்துவார்கள்.
இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான், இனியும் காட்டிற்குள் வெளிப்படையாக நடமாட முடியாது. அதனால், காட்டிற்குள்ளேயே சுரங்கம் அமைத்துமிகவும் பாதுகாப்பாக பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தலாம் என்றும் தீர்மானித்திருக்கிறார்களாம் காட்டில் இருக்கும் வீரப்பன் கோஷ்டியினர்.
6000 கிலோமீட்டர் சுற்றளவுள்ள அடந்த காட்டில், இரண்டு அடி தூரத்தில் மறைந்து இருந்து தாக்கினாலே தெரியாது. அந்தளவிற்கு நெருக்கமானஅடர்ந்த மரங்கள் சூழ்ந்த காடு அது.
இது தவிர, பாம்பு, நரி, கரடின்னு ஏகப்பட்ட சின்னச்சின்ன பிரச்சனைகள் இருக்கிறது. இவையெல்லாம் அவர்களுக்கு பிரச்சனையே இல்லாத விஷயங்கள்.அதிரடிப்படை வீரர்களுக்கு இவை எல்லாமே புதிது. அட்டைக்கடி என்பது கொடூரம். இதிலிருந்து தப்பிக்க ஸ்பெஷல் ஷூ க்கள் வேண்டும். பலஉபகரணங்களும் தேவை.
இது சாதாரணமான நேரங்களில் வீரப்பனை பிடிக்க முயற்சி செய்கின்ற பொழுது வருகின்ற பிரச்சனைகள். இந்த முறை வீரப்பன் மட்டுமல்ல,தீவிரவாத இயக்கங்களும் அவனுடன் இருப்பதால் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சுரங்கப்பாதைக்குள் அவர்கள் பதுங்கிக்கொண்டால், எப்படி கண்டுபிடிப்பது என்பதும் எவ்வளவு நாட்கள் காட்டிற்குள் அவர்களைப்பிடிப்பதற்காககாத்துக் கொண்டிருக்க முடியும் என்பதும் திகைப்பாகவே இருக்கிறது என்கிறார்கள் தமிழக அதிகாரிகள்.
சுரங்கப்பாதை தவிர, அறுபதில் இருந்து தொண்ணுறு பேர் வரை வீரப்பனுடன் காட்டில் இருக்கக்கூடும் என்று நினைக்கிறது தமிழக அரசு. கூடவேஆயுதங்களும், வெடிமருந்துகளும் கூட இப்பொழுது அங்கே சேமிக்கப்பட்டு விட்டது என்று நம்புகிறார்கள் அதிகாரிகள்.
சில அதிகாரிகளிடம் விசாரிக்க முதலில் ராஜ்குமார் பத்திரமா திரும்பணும். அதுதான் முக்கியம், அதன் பிறகு வீரப்பனை எப்படி பிடிக்கிறதுன்னுஎங்களுக்குத் தெரியும் என்று இறுகிய முகத்தோடு பேசுகிறார்கள் தமிழக அதிகாரிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications