தொடங்கியது ஒலிம்பிக்; ஜொலிக்கிறது சிட்னி

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

இந்த புதிய மில்லினியத்தின் முதலாவதும், மொத்தத்தில் 27-வதுமான ஒலிம்பிக்போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத்தொடங்கியது.

கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் என தொடக்க விழா களைகட்டியது.சிட்னியில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இந்த தொடக்க விழா நடைபெற்றது.ஸ்டேடியம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் அமர்ந்து தொடக்க விழாநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

தொடக்க விழாவின் நிறைவாக 17 நாட்கள் நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக்போட்டியில் கலந்து கொள்ளும் 200 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் வீரர் மற்றும்வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மிகப் பெரிய அணியாகஆஸ்திரேலியா அணியினர் அணிவகுத்து வந்தனர்.

இதில் பரம விரோதிகளான தென் கொரியா மற்றும் வட கொரியா நாடுகளைச் சேர்ந்தவீரர்கள் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து வந்து அனைவரையும் பரவசத்தில்ஆழ்த்தினர்.

தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிகளைஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

விழாவின் தொடக்கமாக ஒரு வீரர் குதிரையில் அமர்ந்து ஸ்டேடியத்தின் மையப்பகுதிக்கு வந்து விழா தொடங்குவது தொடர்பாக முழக்கமிட்டார். அவரைத்தொடர்ந்து ஒலிம்பிக் சின்னம் பொறித்த கொடிகளைப் பிடித்தபடி குதிரை வீரர்கள்வரிசையாக வந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஒலிம்பிக் கொடிச் சின்னம் (5 வளையங்கள்) போன்றுவரிசையாக சிறிது நேரம் நின்று காட்டினர்.

அதற்குப் பின் ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமான பழங்குடியின மக்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக 2,000 பேர் கொண்ட வாத்தியக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அது ஒரு இசை மழை!.

ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களின் வாழ்க்கை முதல் சமீபத்திய நவீன வாழ்க்கைமுறையை எடுத்துக் காட்டும் கலை நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டப்பட்டன.ஆயிரத்துக்கும் அதிகமான கலைஞர்கள் இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்த ஒலிம்பிக்கின் மூன்று சின்னங்களான ஒல்லி, சிட், மில்லி ஆகிய விலங்குகளின்உருவங்களில் ஆட்கள் ஸ்டேடியத்துள் நுழைந்தபோது ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தஅனைவரும் எழுந்து நின்றனர். கரகோஷம் எழுப்பி உற்சாகத்தைத் தூவினர்.

மைதானம் முழுவதும் வண்ண வண்ண உடைகளை அணிந்து கலைஞர்கள் தங்களதுநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். கடலுக்கு அடியில் நடப்பது போன்ற நிகழ்ச்சிகள்,வானத்தில் பறப்பது போன்ற நிகழ்ச்சிகள் போன்ற ஹைடெக் மாயங்களுக்குமபஞ்சமில்லை. லேசர் நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டப்பட்டன.

ஸ்டேடியம் வண்ண விளக்குகளில் ஜொலிக்க, மிக ரம்மியமான பின்னணி இசையில்பார்வையாளர்கள் நனைந்தனர்.

கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் சர்வதேச ஒலிம்பிக்கமிட்டித் தலைவர் சாமரான்ச் பேசினர். அதன்பிறகு ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல்சர் வில்லியம் டீன், ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதாக முறைப்படி அறிவித்தார்.

அதன் பிறகு ஸ்டேடியத்தில் ஒலிம்பிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. ஒலிம்பிக் கொடிஏற்றி வைக்கப்பட்ட பிறகு ஒலிம்பிக் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.

போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் அணிவகுப்புப் பிறகு ஒலிம்பிக் ஜோதிஏற்றி வைக்கப்பட்டது.

கடந்த 100 நாட்களாக உலகம் முழுவதும் பலநாடுகள் வழியே கொண்டு வரப்பட்டஒலிம்பிக் ஜோதி, தொடக்க விழா நிகழ்ச்சிகளின் இறுதியாக ஸ்டேடியத்துக்குக்கொண்டு வரப்பட்டது.

மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்ட ஜோதியை முதன் முதலில் பெற்றுக் கொண்டார்மெல்பெர்ன் ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனைபெட்டி குத்பெர்ட்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சக்கர நாற்காலியில் உட்கார்ந்த நிலையில்,ஜோதியை கையில் ஏந்திக் கொண்டு மைதானத்தில் சிறிது தூரம் அவர் வந்ததுகுறிப்பிடத்தக்கது. பின்னர் அவரிடமிருந்து ஆஸ்திரேலியாவின் முன்னாள்வீராங்கனைகள் ஒலிம்பிக் ஜோதியை எடுத்து வந்தனர்.

கடைசியாக, ஆஸ்திரேலிய முன்னாள் தடகள வீராங்கனை கேதி ஃபிரீமேன் ஒலிம்பிக்ஜோதியை ஏற்றி வைத்தார். புதுமையான முறையில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைக்கப்பட்டது குறப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு 7 ஆயிரத்துக்கும் அதிகமான வகைவகையான வாண வெடிகள்வெடிக்கப்பட்டன. வண்ணவண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+