தடையை மீறி சிறை நிரப்புவோம் .. த.மா.கா.
சென்னை:
தமிழக அரசு தடை விதித்தாலும் தடையை மீறி சிறை செல்வோம் என்று த.மா.கா .அறிவித்துள்ளது.
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை வருகிற27ம் தேதி நடத்தப் போவதாக த.மா.கா. தலைவர் மூப்பனார் அறிவித்துள்ளார்.
இப்போராட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து சென்னையில் வெள்ளிக் கிழமை த.ம.கா.பொதுச்செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27--ம் தேதி காலை 10 மணிக்கு அரசுஅலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் இப்போராட்டம் நடைபெறும். மக்கள்பிரச்னைகளுக்காக நடத்தப்படும் இந்த போராட்டத்தில் அநாகரிகமான கோஷங்கள் இருக்காது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது. வீரப்பன் விவகாரம் எரிமலையாய்வெடிக்கிறது. சென்னைக்கு கிருஷ்ணா நீர் வராமல் குடிநீர் பிரச்னை வாட்டுகிறது. இதெல்லாம்வலியுறுத்தி தான் இந்த போராட்டமே.
இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி சட்டம் தன் கடமையை செய்யும்என்று கூறியுள்ளார். சட்டத்தை பயன்படுத்தி எங்களின் நியாயமான போராட்டத்திற்கு அரசு தடைவிதித்தாலும், தடையை மீறி நாங்கள் மறியல் செய்வோம். சிறை செல்வோம் என்றார்.
பின்னர் த.மா.கா.வின் கூட்டணி ஆட்சி கோரிக்கை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது,இதுதொடர்பாக சிதம்பரத்தில் நடந்த த.மா.கா. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்அப்படியே நீடிக்கிறது என்று பதிலளித்தார் பீட்டர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications