விமான விபத்து: விசாரணையில் இலங்கைக்கு வெளிநாட்டு நிபுணர்கள் உதவி
கொழும்பு:
இலங்கையில் சனிக்கிழமை நடந்த விமான விபத்து பற்றி நடைபெறும் விசாரணையில்இலங்கை அரசுக்கு உதவ வெளிநாட்டு நிபுணர்கள் வருகின்றனர்.
இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் அஷ்ரப் உள்பட 15 பேர் பயணம் செய்தஹெலிகாப்டர் கேகல்லே மாவட்டத்தில் உரகான்டா மலைப்பகுதியில் விழுந்துநொறுங்கியது.
இதில் அமைச்சர் உள்பட 15 பேர் பலியானார்கள். இந்த விபத்து எவ்வாறு நடந்ததுஎன்று தெரியவில்லை. இந்த விபத்து பற்றி விசாரணை நடத்த 4 பேர் கொண்ட சிறப்புவிசாரணை கமிஷனை இலங்கை விமானப் படை நியமித்துள்ளது.
இந்த சிறப்பு விசாரணை கமிஷன் விசாரணைக்கு உதவ உக்ரைன் நாட்டு மிக் 17 ரகஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இலங்கை வரவுள்ளனர்.
விமான விபத்துக்கு மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்றுகருதப்படுகிறது. ஆனால், இந்த விபத்துக்கு எதிரிகளின் சதி காரணமாக இருக்கலாம்என்று அஷ்ரப்பின் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, விமான விபத்தில் பலியான அமைச்சர் அஷ்ரப்பின் உடல் சனிக்கிழமைமாலை அடக்கம் செய்யப்பட்டது.
கொழும்பில் உள்ள ஜவாட்டா முஸ்லிம் இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.இதில் ஏராளமான இலங்கை முஸ்லிம் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சரின் மரணத்தை அடுத்து இலங்கையில் உள்ள அனைத்து அரசுஅலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றுஇலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications