இ.காமர்ஸ் மூலம் அதிகரிக்கும் ரெடிமேட் ஆடை ஏற்றுமதி வாய்ப்புக்கள்
திருப்பூர்:
ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு இ காமர்ஸ் மூலம் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இதனை ஏற்றுமதியாளர்கள் உரிய முறையில்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 10 வது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் நட ந்தது. இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் சக்திவேல்பேசியதாவது:
ஏற்றுமதிக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த சங்கம் மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் பொருளாதார தாரளமயமாக்கல், சர்வதேச சந்தையின்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் உற்பத்தி திறனைப் பெருக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
முக்கியமாக தொழிலாளர்கள் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். உற்பத்தி திறனில் தைவான், தாய்லாந்து, சீனா, ஹாங்காங், கொரியா ஆகியநாடுகள் பெரும் தேர்ச்சி பெற்றுள்ளன. எதிர்வரும் போட்டியையும் தேவையையும் சமாளிக்க இந்த நாடுகள் தயார் நிலையில் உள்ளன.
தொழிலாளர் விதிமுறைகளை அமல்படுத்துவதில் தேசிய, சக நோக்கில் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். உற்பத்திக்கு ஏற்ற ஊதியம்என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு தேவையான பொருளாதாரக் கொள்கையை அறிவித்தபோதிலும், வெளி மார்க்கெட்டில் போட்டி நிலவிவருகிறது.
இ காமர்ஸ் மூலம் வர்த்தக வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இந்த வாய்ப்புகளை உரிய முறையில் ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதிக முதலீடு, ஆரய்ச்சிக்கு நிதி, பெரிய ஆர்டர்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவை.
பிரதமர் வாஜ்பாய் சிறு தொழில்களின் வளர்ச்சிக்காக பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஒரு ஏற்றுமதி பொருளாதார மண்டலத்தைஇங்கு ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேலும், வர்த்தகத் தொடர்பு விரிவாக்கத்திற்கும் வழி ஏற்படும்.
புதிய முதலீடுகளுக்கும், ஏற்றுமதிக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அப்போது தான் புதியமுதலீடுகள் மற்றும் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படும் என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications