அணுகுண்டு சோதனைக்குப் பிறகு இந்திய நிலையில் மாற்றம் - வாஜ்பாய்
வாஷிங்டன்:
1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனைக்குப் பிறகுசர்வதேச விஷயங்களில் இந்தியாவின் நிலை மாறியுள்ளது என்று இந்தியப் பிரதமர்வாஜ்பாய் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான தனது அரசு முறைப் பயணத்தின் நிறைவையொட்டி அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
1998-ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டை வெடித்துச் சோதனைநடத்தியது. தனது பாதுகாப்புக்காகவே அச் சோதனையை இந்தியா மேற்கொண்டது.
அச் சோதனைக்குப் பிறகு சர்வேத விஷயங்களில் இந்தியாவின் நிலை மாறியுள்ளது.மேலும், சர்வேத மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு ஏற்பவும் இந்தியா தனதுசெயல்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளது.
தற்போது உலக அரங்கில் இந்தியா உன்னதமான, சரியான இடத்தைப் பிடித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புதான் முதல் பணி என்பதில் இந்திய அரசு மிகவும் அக்கறையுடன்செயல்படுகிறது. அதனால்தான் விஞ்ஞானிகள் தயார் என்று அறிவித்த பிறகுஅணுகுண்டு சோதனை நடத்த அரசு உத்தரவிட்டது.
அணு ஆயுதங்களால் இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் பதில் தாக்குதல் நடத்தவும் ஆயுதம் இல்லாத நிலையில் இந்தியாஇருக்கக்கூடாது என்பதை உணர்ந்துதான் அணுகுண்டு சோதனைக்கு அரசுஉத்தரவிட்டது.
நாட்டின் பாதுகாப்பைக் கருத்திக் கொண்டுதான் அணுகுண்டு சோதனைக்கு அரசுஉத்தரவிட்டதே தவிர வேறு காரணம் ஏதும் இல்லை. எந்த நாட்டையும்தாக்கவேண்டும் என்ற எண்ணம் இந்தியாவுக்கு இல்லை.
கிழக்கு மற்றும் தெற்காசியப் பகுதியில் அமைதி நிலவவேண்டும் என்பதில் இந்தியாஉறுதியோடு செயல்படுகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் பாகிஸ்தானுடன் பேச்சுநடத்த இந்தியா விரும்பியது.
அதன் முதற்படிதான் லாகூர் பிரகடனம். ஆனால், அமைதியை பாகிஸ்தான்விரும்பவில்லை. அங்குள்ள ராணுவ ஆட்சி லாகூர் பிரகடனம் மட்டுமல்ல அதற்குமுன்பு ஏற்படுத்தப்பட்ட எந்த பிரகடனத்தையும் ஏற்கவில்லை. காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தானுக்கு எந்த வாய்ப்பையும் இந்தியா தராது. சர்வதேசஎல்லைக்கோட்டைக் கடந்து இந்தியாவுக்குள் எந்த பயங்கரவாத நடவடிக்கையில் யார்ஈடுபட்டாலும் அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications