"அய்யோ.. வேண்டாம் புதிய கட்சி"
சென்னை:
எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் இருந்தவர்கள் புதிய கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதாக இருந்த முன்னாள் அமைச்சர்பொன்னையன் திடீரென அந்தக் கட்சியில் சேர விரும்பவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம், ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன், வி.வி.சுவாமிநாதன் உள்பட 7 பேர்சேர்ந்து திங்கள்கிழமை புதுக்கட்சி ஆரம்பிக்கவுள்ளனர்.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்காகவே தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அர்பணித்தார்.
தந்தைபெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை தமிழ் மண்ணில் அரங்கேற்றி வெற்றி கண்டார்.
மாறுபட்ட கருத்துடையோரும், எம்.ஜி.ஆரின் மனித நேயத்தையும், தமிழ் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான சாதனைகளையும் மதித்து, அவரின்மறைவுக்குப்பிறகும் அவருக்கு புகழ்மாலை சூட்டுவது கண்டு தமிழ்த்தாயே மகிழ்ச்சி அடைகிறாள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் லட்சக்கணக்கான உண்மைத் தொண்டர்கள், பல பிரிவுகளாக எதிரும், புதிருமாக செயல்படுவது நாளடைவில் அவரதுபெயரையும், புகழையும் மங்கச்செய்து விடுமோ என்ற அச்ச உணர்வு தமிழ்சமுதாயத்தில் எழுந்துள்ளது.
ஏற்கனவே இருக்கின்ற பல பிரிவுகளை ஒருங்கிணைப்பு மட்டுமே எம்.ஜி.ஆரின் புகழை வளர்க்க உதவியாக இருக்கும். மாறாக மேலும், அவரதுபெயரில் பல கட்சிகள் உருவாகுதலை தமிழ்ச்சமுதாயம் விரும்பாது, ஏற்றுக்கொள்ளாது, அவரது பெயரையும், புகழையும் பின்னடைவிற்கு தள்ளிவிடும்சூழலை உருவாக்கிவிடும்.
எனவே திங்கள்கிழமை எஸ்.டி.சோமசுந்தரம், க.ராசாராம் ஆகியோர் துவக்கும் புதிய அரசியல் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவிரும்பவில்லை என்பதை அறிவிக்கிறேன். இவ்வாறு, அறிக்கை வெளியிட்டுள்ளார் பொன்னையன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications