பெட்ரோல் விலை உயர்கிறது?
சென்னை:
பெட்ரோலிய கச்சா எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 36 டாலராக அதிகரிக்க இருப்பதால் பெட்ரோலின் விலையும் உயருமா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.
மேலும் கச்சா எண்ணை இறக்குமதி செலவு 57, ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மத்திய அரசு 163 ரூபாய் மானியம் அளித்து வருகிறது. இந்த மானியத்தின் அளவை மேலும் அதிகரிக்க முடியாதுஎன்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
எனவே எண்ணை தொகுப்பு நிதியில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து பிரதமர் இந்தியா திரும்பியதும் ஆலோசிக்கப்படும். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு,பெட்ரோல் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 8 லட்சம் பேரலாக உயர்த்த முடிவு செய்திருக்கிறது. என்றாலும் பெட்ரோலின் தேவை ஒரு நாளைக்கு 12லட்சம் பேரல்கள் என்பதால் உற்பத்தியில் பற்றாக்குறைதான் நிலவி வருகிறது.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதுவானாலும் பிரதமர் வாஜ்பாய்டெல்லி திரும்பியதும்தான் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அமைச்சர் பொன்னுசாமி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications