துடுப்புப் படகு: முடிந்தது இந்தியாவின் சவால்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
துடுப்புப் படகுப் போட்டியில் ஆண்களுக்கான காக்ஸ்லெஸ் பிரிவில் இந்திய ஜோடிதோல்வியுற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் கசம் கான் மற்றும் இந்தர்பால் சிங்ஆகியோர் கொண்ட இந்திய அணி 5-வது இடத்தைப் பெற்றது. இதையடுத்து அடுத்துசுற்றுக்குக் கூட முன்னேறாமல் இந்திய அணி தோல்வியடைந்தது.
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் அமெரிக்காவில் 4மாதத்துக்கு மேல் இந்திய அணி பயிற்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தான் கலந்து கொண்ட முதல் சுற்றில் கடைசியாக வந்தது. முதல் 3இடங்களைப் பெறும் அணிதான் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஆனால், கடைசியாகவந்ததால் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications