மனைவி, மகளைக் கொன்று தொழிலாளி தற்கொலை
காஞ்சிபுரம்:
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கள் இறக்கும் தொழிலாளி தனது மனைவிமற்றும் மகளுக்குப் பூச்சி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் நடந்தது.
இது பற்றி கூறப்படுவதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(45). கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின்காரணமாக நிறைய கடன் வாங்கினார்.
கடன் அதிகமாகியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சேகர் குடும்பத்தினருடன்தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துமனைவி, மகன் மற்றும் மகளுக்குக் கொடுத்தார். பிறகு தானும் பூச்சி மருந்து குடித்தார்.
பின்னர் விஷயம் தெரிந்து பக்கத்து வீட்டினர் வந்து பார்த்தபோது சேகர் மற்றும் அவரதுமனைவி, மகள் மூன்று பேரும் இறந்துகிடந்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தசேகரின் 5 வயது மகனை அவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச் சம்பவம் குறித்து திருப்போரூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சட்டவிரோதநடவடிக்கையில் சேகர் ஈடுபட்டு வந்ததாகக் கூறி அவரை போலீஸார் கைது செய்துபோலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.
உள்ளூர் திமுக பிரமுகர் தலையீட்டின் பேரில் சேகர் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.அதற்குப் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் கைது செய்ததால்மனமுடைந்து சேகர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications