டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வீடன் வீரருடன் மோதுகிறார் லியாண்டர் பயஸ்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சவால் புதன்கிழமைதொடங்குகிறது.
ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், தனது முதல் சுற்றில் ஸ்வீடன் வீரர்மைக்கேல் டில்ஸ்ட்ராமுடன் மோதுகிறார்.
அட்லாண்டாவில் கடைசியாக நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம்வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அந்த பதக்கத்தைப் பெற்றுத் தந்தது லியாண்டர் பயஸ்தான்என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சுதந்திரத்துக்குப் பிறகு தனி நபர் ஒருவர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்கம்பெற்றுத் தந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்த முறையும் டென்னிஸ் போட்டியில் அவர் பதக்கம் வெல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், முதல் சுற்றில் அவர் வெற்றிபெற சற்று கடுமையாகப்போராடவேண்டியிருக்கும்.
உலக டென்னிஸ் அரங்கில் டில்ஸ்ட்ராம் 52-வது இடத்திலும், பயஸ் 113-வது இடத்திலும்உள்ளனர். அதே நேரத்தில் அட்லாண்டா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றபோது பயஸ் 125-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயஸும், டில்ஸ்ட்ராமும் இரண்டாவது முறையாக இப்போது மோத உள்ளனர். 1998-ம்ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் நடந்த முதல் சந்திப்பில் பயஸை டில்ஸ்ட்ராம்தோற்கடித்துள்ளார்.
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் லியாண்டர்பயஸ் மட்டுமே கலந்து கொள்கிறார். அவர் தோற்றால் டென்னிஸில் ஒற்றையர் பதக்கக்கனவு தகர்ந்துவிடும்.
இருப்பினும், டென்னிஸில் இரட்டையர் போட்டியில் அவரும் மகேஷ் பூபதியும் ஜோடிசேர்ந்து விளையாடுகின்றனர்.
இரட்டையர் போட்டியும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. காலையில்ஒற்றையர் போட்டியில் விளையாடிவிட்டு இரட்டையர் போட்டியில் விளையாட வேண்டியகட்டாயத்தில் லியாண்டர் பயஸ் உள்ளார்.
இந்திய ஜோடி தனது முதல் சுற்றில் ருமேனியா ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications