வங்கியில் 6 லட்சம் மோசடி செய்ய முயன்றவருக்கு சிறை
சென்னை:
ரூ. 6 லட்சத்திற்கு போலி டிராப்ட் (டி.டி.) கொடுத்து வங்கியை ஏமாற்ற முயன்றவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் பிரெடரிக் அடைக்கலராஜ். வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
பெங்களூரில் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள கனரா வங்கியில் இருந்து ரூ. 6 லட்சத்து 52 ஆயிரம் தொகைக்கு டிமாண்ட் டிராப்ட் ஒன்றை எடுத்திருப்பதாகக் கூறி,சென்னை அண்ணா நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட் செய்து பணம் பெற முயன்றார்.
ஆனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் அந்த டி.டி. பற்றி விசாரிக்கையில் அது போலி என்பதை கண்டுபிடித்தனர்.
உடனே இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டு, அவர் மீது மோசடி வழக்குதொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் மெட்ரோபாலிடன் நீதிமன்றம், மோசடிக் குற்றம் புரிந்த அடைக்கலராஜூக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 4ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications